உள்ளூர் செய்திகள்

அதிமேதாவி அங்குராசு!

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!எறும்பு ஒரு மிகப் பெரிய பளு துாக்கி!எறும்புகள், ஆறு வண்ணங்களில் உள்ளன. அவை, பச்சை, சிவப்பு, பழுப்பு, மஞ்சள், நீலம் மற்றும் ஊதா. எறும்புகளால், திட உணவுகளை உண்ண இயலாது; அதில் இருந்து, ஜூஸ் எடுத்து தான் உண்ணும். அதன் தலையில் காணப்படும், கொம்பின் மூலமாகத் தான், தொடு உணர்வு மற்றும் வாசனையை உணரும்.எறும்புகளுக்கு, இரண்டு வயிறுகள் உண்டு. ஒரு வயிற்றில், தனக்கு தேவையான உணவுகளை வைத்துக் கொள்ளும்; மற்றொரு வயிற்றில், பிற எறும்புகளுக்கான உணவை எடுத்துச் செல்லும். பூச்சி இனங்களில், எறும்புகளுக்கு தான், அதிக மூளை உள்ளது. சில எறும்புகள், ஒரு நாளைக்கு, 7 மணி நேரம் துாங்கும். ராணி எறும்புகள் பிறக்கும் போது, இறக்கையுடன் பிறக்கும். ஆனால், அவை புதிய எறும்பு கூட்டத்திற்கு தலைவியாகும் போது தான், இறக்கை இல்லாமல் போகும்.'ஸ்லேவ் மேக்கர்' என்ற வகை எறும்புகள் கூட்டை சுற்றி, பாதுகாவல் செய்யும்; மற்ற எதிரி எறும்புகள் வந்து, கூட்டில் உள்ள எறும்பு குஞ்சுகளை திருடி செல்லாமல், பார்த்துக் கொள்ளும். பின், வளர்ந்த எறும்புகளை அடிமையாக்கும் வேலையை செய்யும். ஒரு எறும்புக் கூட்டில், 7 லட்சம் எறும்புகள் இருக்கும். இந்த பூமியில், தனக்கான உணவை, தானே உற்பத்தி செய்து சாப்பிடும் ஆற்றல், இரண்டே இரண்டு உயிரினங்களுக்கு மட்டுமே உண்டு. ஒன்று மனிதன்; மற்றொன்று எறும்பு.சிறிய இலைகளை எறும்புகள் துாக்கி போவதை பார்த்திருப்போம். அவை, 'இலை நறுக்கி' என்ற வகையை சேர்ந்தது. இந்த எறும்புகள், இலைகளை, சின்ன சின்னதாக கத்தரித்து எடுத்து வந்து, தன் கூட்டுக்குள் அடுக்கி வைத்து விடும். சில நாட்களுக்குப் பின், அந்த இலையில், ஒரு வகையான பூஞ்சைகள் வளரும்.அவற்றை எறும்புகள் உணவாக உட்கொள்ளும்; அந்த இலைகள் காய்ந்த பின், அவற்றை வேலைக்கார எறும்புகள் வெளியில் எரிந்து விடும். பின், மீண்டும் புதிதாக வெட்டிய இலைகளை கொண்டு வந்து வைக்கும். அதில் வளரும் பூஞ்சகைளை உண்ணும். இப்படி, தனக்கு தேவையான உணவை, தானே விவசாயம் செய்துகொள்ளும்!பலே கில்லாடிகள் தான்.லாக்கில் லாக்காகி விட்டால்!இப்போ எல்லாரும், 'ஆன்ட்ராய்ட் மொபைல் போன்' உபயோகப்படுத்த ஆரம்பித்து விட்டதால், அதை, 'லாக்' செய்யப் பழகி விட்டோம். ஆனால், அது, சில நேரங்களில், நமக்கே ஆபத்தில் முடியலாம் தெரியுமா... மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்த ஒருவருக்கு, ஆக்சிடென்ட் நடந்திருக்கிறது. அதைப் பார்த்தவர்களில் ஒருவர், ஆம்புலன்சுக்கும், போலீசுக்கும் தவகல் கொடுத்ததோடு, விபத்து நேர்ந்தவரின் மொபைல் போனை எடுத்து, அவரது உறவினர்களுக்கும், தகவல் கொடுத்திருக்கிறார்.சரியான நேரத்தில், எல்லாருக்கும் போன் செய்ய முடிந்ததால், ஆக்சிடென்ட்டான, அந்த நபரைக் காப்பாற்ற முடிந்தது. மொபைல் போனை, 'லாக்' செய்திருந்தால், என்ன ஆவது... 'லாக்' ஆன மொபைல் போன் ஸ்கிரீனில் கூட, இது போன்ற சூழலில் ஒன்றிரண்டு முக்கியமான போன் எண்கள் தெரியும்படி பதிவு செய்து கொள்ள முடியும்!இதோ அதன் செய்முறை செட்டிங்கில் சென்று, செக்யூரிட்டி செலக்ட் செய்யவும். அதில், ஓனர் இன்போ என்று இருக்கும். அதில் நமக்கு முக்கியமானவரின் பெயரையும், மொபைல் எண்ணையும் டைப் செய்து, என்டர் கொடுத்தால், அது கார்பன் காப்பியாக, நம்முடைய ஸ்கிரீனில் இருக்கும். லாக்கை எடுத்து விட்டால், அந்த எண் தெரியாது. ஆபத்து சமயங்களில், அடுத்தவர்கள், நம் வீட்டாருக்கு போன் செய்யவும், வசதியாக இருக்கும்!- என்றென்றும் அன்புடன், அங்குராசு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !