உள்ளூர் செய்திகள்

அதிமேதாவி அங்குராசு!

குழந்தை ஆடை!கலர், டிசைன், டிரெண்ட் என பார்த்து வாங்கப்படுகிறது ஆடை. குழந்தைகள் அணியும் ஆடை வெகு கவனத்திற்குரியன. முதலில், அவர்கள் அணியும் ஆடை வசதியாக இருக்க வேண்டும்; அதே நேரம் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.குழந்தைகளுக்கு...* எம்ப்ராய்டரி, சமிக்கி போன்ற வேலைப்பாடு இல்லாத ஆடைகளை வாங்க வேண்டும்* கைக்குழந்தை சிறுநீர் கழிக்கும் ஆடைகளை துவைத்து பயன்படுத்த வசதியாக இருக்க வேண்டும். துவைக்கும் போது, டிடர்ஜென்ட் சோப், வாசனை திரவியங்களை பயன்படுத்தக் கூடாது* துணி நாப்கின்களைத் துவைத்து வெயிலில் காயவைத்துத்தான் பயன்படுத்த வேண்டும்* உல்லன் ஸ்வெட்டர், ஸ்கார்ப் போன்றவற்றைத் தினமும் துவைக்கவில்லை என்றாலும், வெயிலில் காயவைத்தே பயன்படுத்த வேண்டும்* பாலியஸ்டர், இறுக்கமான ஆடைகளை தவிர்க்க வேண்டும்.துணிகளில் துளிக் கூட இருக்கக்கூடாது ஈரம். ஆடைகளை எப்போதும் ஈரப்பதத்துடன் மடித்து வைக்கக் கூடாது. மழை, குளிர் காலத்தில் அவசரமில்லாமல் கூடுதல் நேரம் உலர்த்தி நன்கு காய்ந்த பின்னரே மடிக்கவும். ஈரப்பதமான துணிகளில் பூஞ்சை வளர வாய்ப்பு ஏற்படும். பசை உள்ள ஆளு !பசை ஒட்ட உதவும். பணம் நிறைய வைத்திருப்பவரை, 'பசை உள்ள ஆளு' என்பர். கடையில் மட்டுமல்ல, உடலிலும் பசை உண்டு.கொலாஜன் என்பது, மனித உடலில் தசை, எலும்பு, தோல், ரத்தக்குழாய், ஜீரண உறுப்புகளில் உள்ள ஒருவகை புரதம். இது எலும்பு, தோல் போன்றவற்றை இறுக்கமாகவும், துடிப்பான சக்தியுடனும் வைத்திருக்க உதவுகிறது. மூட்டு இணைப்புகளுக்கு ஒட்டும் பசைத்தன்மையைத் தருகிறது. வயது முதிரும் போது, இந்தப் புரத உற்பத்தி உடலில் குறையும். அதனால் தான், முதியோருக்கு சருமத்தில் சுருக்கம், தசை தளர்ந்து போதல், மூட்டுகள் இயங்குவதில் தொல்லை போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இனிப்பு அதிகம் உண்ணுதல், புகை பிடித்தல், வெயிலில் அதிக நேரம் சுற்றுதல் போன்ற பழக்கங்களால், உடலில் கொலாஜன் உற்பத்தி குறைய வாய்ப்பு உண்டு. எனவே, இவற்றை தவிர்க்க வேண்டும்.இன்றியமையாத கொலாஜன் உற்பத்திக்கு உதவும், உணவுப் பொருட்களை பற்றி தெரிந்து கொள்வோம்...முட்டைக்கோஸ், சிவப்பு கோஸ், அவகேடோ பழம், மீன், மாதுளை, ஸ்ராபெர்ரி, சிவப்பு முள்ளங்கி, பீட்ரூட், கேரட், முளைகட்டிய பயறு வகைகள், பூண்டு, சாத்துக்குடி, எலுமிச்சை, ஆரஞ்சு, ஆளி விதை, கீரை வகைகள், சோயா பால், சோயாவில் தயாரிக்கும் உணவுகளால், உடலில் கொலாஜன் அதிகம் உற்பத்தியாகிறது.உடலில் பசைக் குறைவு ஏற்பட்டால்...* இளவயதிலேயே முதிர்ந்த தோற்றம்* வயிற்று உபாதைகள் * அஜீரணம்* அடிக்கடி மலம் கழித்தல்* உணவு உண்ட உடனே மலம் கழித்தல்* கடும் சோர்வு* மூட்டுவலி போன்ற உபாதைகள் வரக்கூடும்.உடலுக்கு இந்தப் புரதத்தின் ஒரு நாளையத் தேவை பற்றி சரியாகப் பரிந்துரைக்கப்படவில்லை. எனினும் ஆரோக்கியத்தில் இன்றியமையாத இந்தப் புரதம் நிறைந்த உணவுப் பொருட்களை, தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.- என்றென்றும் அன்புடன், அங்குராசு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !