உள்ளூர் செய்திகள்

மிதிவண்டி!

ஆசிய நாடான சீனா உற்பத்தி செய்யும் சைக்கிள் என்ற மிதிவண்டியில், 40 சதவீதத்தை ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவில், 22 லட்சம் மிதிவண்டிகள் ஆண்டுதோறும் உற்பத்தியாகிறது. இதில், 1 சதவீதம் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் அதிகமாக உற்பத்தி செய்வது, ஹீரோ நிறுவனம். அடுத்து, டி.ஐ. சைக்கிள் நிறுவனம். இதன் பிராண்டுகள், ஹெர்குலஸ், பிலிப்ஸ் மற்றும் பி.எஸ்.ஏ., ஆகியவை. சமீபகாலமாக, 8 ஆயிரம் முதல், 20 ஆயிரம் ரூபாய் விலை மதிப்புள்ள மிதிவண்டிகளுக்கு, இந்தியாவில் வரவேற்பு அதிகம். காரணம், கணினி மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரிவோர், மிதிவண்டி பயன்படுத்துவதை விரும்புகின்றனர். ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில், கொரோனா தொற்று ஊரடங்கு காலத்தில், மிதிவண்டி ஓட்டுவது, 200 சதவீதம் அதிகரித்துள்ளது. அன்றாடம் மிதிவண்டி ஓட்டுவது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !