உள்ளூர் செய்திகள்

துணிவே துயர் துடைக்கும்!

வாழ்வின் துவக்கத்தில், பெரிய தீ விபத்தில், தந்தையின் சொத்துகளை, ஒருவர் இழந்தார். வருமானம் தந்து கொண்டிருந்த சொத்துக்களையும், அரசு பறிமுதல் செய்து விட்டது. கடுமையான வறுமையால் பாதிக்கப்பட்ட, அவருக்கு, கீல்வாதம் வந்தது. கடும் வேதனை பட்டார். தொடர்ந்து, வந்த சோதனையாக அவரது கண் பார்வையையும் இழந்தார். எல்லாம் இழந்த பின்னும், நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை; வேதனை சூழ்ந்த நிலையில், அவர், 'இழந்த சொர்க்கம்' என்ற ஒரு இலக்கியத்தை படைத்தார். உலகின் புகழ்பெற்றவராக மாறினார்; அவர் தான், ஐரோப்ப கண்டத்தில், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த, புகழ்பெற்ற ஆங்கில கவிஞர், ஜான் மில்டன்.வாழ்வில் தோல்வி கண்ட பலரும், வெற்றிக்கு ஒரு படி முன்னால் தான் தோற்றுப் போயிருப்பர். எனவே, தோல்வி, வெற்றிக்கு, ஒரு அடி முன்னால் இருப்பதாக எண்ணி, தொடர்ந்து முயன்றால், சாதிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !