குட்டீஸ் கார்னர்!
எண்ணெயில் தண்ணீர் ஊற்றினாலோ, தண்ணீரில் எண்ணெய் ஊற்றினாலோ இரண்டும் ஒன்றுடன் ஒன்று கலக்காமல் இருக்கும். இதற்கு காரணம் என்ன தெரியுமா?எண்ணெயின் மூலக்கூறுகள் பெரிதாகவும், தண்ணீரின் மூலக்கூறுகள் சிறிதாகவும் இருப்பதால், தண்ணீர், எண்ணெயுடன் கலப்பதில்லை. மேலும், தண்ணீருடைய மூலக்கூறின் இருபுறமும் எதிர் எதிராக மின்புலம் உள்ளது. அதனால், எண்ணெயின் மூலக்கூறுகள் இயற்கையாகவே தண்ணீரின் மூலக்கூறை வெறுக்கின்றன.பூமியில் இருந்து பார்க்கும் போது, வானம் நீல நிறத்தில் தெரிகிறதல்லவா நமக்கு? ஆனால், விண்வெளியில் இருந்து பார்க்கும்போது வானம் கறுப்பு நிறத்தில் தெரியும். இவ்வாறு இரண்டு நிறங்களில் தெரிவதற்கு காரணம் என்ன தெரியுமா?பூமியின் மேல் உள்ள காற்று மண்டல அடுக்குகளில் ஒளிச்சிதறல் ஏற்படுவதால், பூமியில் இருந்து பார்ப்பதற்கு வானம் நீல நிறத்தில் இருக்கிறது. விண்வெளியில் இவ்வாறு ஏற்பட வாய்ப்பில்லை என்பதால், விண்வெளியில் இருந்து பார்ப்பதற்கு கறுப்பு நிறத்தில் தெரிகிறது.