உள்ளூர் செய்திகள்

குட்டீஸ் கார்னர்!

பிரட் எப்படி உருவாகிறது?மாவுடன் நீர் சேரும்போது மாவிலுள்ள புரோட்டினுடனும், மூலக்கூறுடனும் கலந்து ஒருவித மீள் elastic தன்மை பெறுகிறது. இதனுடன் Yeast சேர்த்து சூட்டில் வார்க்கும்போது ஆக்சிஜன், சர்க்கரை மூலக் கூறை சிதைத்து கார்பன்-டை ஆக்ஸைடை பெறுகிறது. ரொட்டியிலுள்ள வாயு வெளியேற பஞ்சு போலாகிறது. இதனால் ரொட்டி உண்ணத் தயாராகிறது.சிலருக்கு அடிக்கடி வயிற்று வலி தான் வரும். ஏனெனில், பலவிதமான உணவுகளை சாப்பிடுவதால் ஜீரண சக்தி குறைந்து சூடு, வாயு போன்ற தொல்லைகள் ஏற்படும். இது நீங்க, சந்தனத்தை வெற்றிலையோடு அரைத்து சிறு உருண்டை செய்து சாப்பிட நன்மை உண்டாகும். உருண்டைகளை காய வைத்தும் உபயோகப்படுத்தலாம்.இன்றைக்கு சாலைகளில் சுமார் ஒரு பில்லியன் மோட்டார் வாகனங்கள் ஓடுகின்றன. கார்கள், பேருந்துகள் மற்றும் விமானங்கள் போன்ற வாகனங்கள், காற்று மாசை உண்டாக்குகிற கழிவுப் புகையை வெளியிடுகின்றன. இத்தகைய புகைகள், வளிமண்டலத்திலுள்ள வாயுக்களின் சம நிலையை நிலைகுலையச் செய்து, உலக வெப்ப மயமாதலை உண்டாக்குகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !