பல் பாதுகாப்பு!
பற்களை அலட்சியம் செய்தால், உடல் நலன் பாதிக்கப்படும்; உணவை அரைத்து சாப்பிடவும், சொற்களை தெளிவாக உச்சரிக்கவும் இயலாமல் போகும்.பல் பாதுகாப்புக்கு கடைபிடிக்க வேண்டியவற்றை பார்ப்போம்...* உணவிற்கு முன் மற்றும் பின், வாய் கொப்பளிப்பது நல்லது* வேப்பங் குச்சியால் பல் துலக்கினால் உடலும், உள்ளமும் உறுதி பெறும்; பார்வை தெளிவாகும்* புளிப்பு சுவையுள்ள உணவை அளவோடு உண்டால் பற்கூச்சம் வராது* வாய் வழியாக சுவாசித்தால் பல் பழுதடையும்* சூடாகவோ, அதிக குளிர்ச்சியாகவோ பானங்களை அருந்தினால், பற்களுக்கு சேதம் விளைவிக்கும்* வெட்டும் பற்கள், கோரைப் பற்கள், முன் கடைவாய் பற்கள், பின் கடைவாய் பற்கள் என முளைத்திருந்தாலும், குறிப்பிட்ட வயதில், விவேகப் பற்கள் முளைக்கும்* பல் சொத்தை, ஈறு வீக்கத்தை ஆரம்பத்தில் கவனிப்பது அவசியம்* ஐஸ்கிரீம், சாக்லெட் சாப்பிடுவதை தவிர்த்து, பச்சைக் காய்கறிகள், பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.பற்கள் உறுதியாக, கீரை, காய்கறி, பால், முட்டையை உணவாக எடுக்க வேண்டும். பற்களில் கரும்புள்ளி, ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்பட்டால், உடனே, பல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.