உள்ளூர் செய்திகள்

துரோகம் செய்யாதீங்க!

ஒருமுறை சபர்மதி ஆசிரமத்தில் காந்தியடிகளோடு, வல்லபாய் படேலும், ஜே.சி.குமரப்பாவும் உணவருந்தினர். உணவில் வேப்பிலை சட்னி பரிமாறப்பட்டிருந்தது.வேப்பிலை சட்னி சாப்பிட்டுப் பழக்கப்பட்ட காந்திஜி, எவ்வித சிரமுமின்றி அதைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். கசப்பான அதை எப்படி சாப்பிடுவது என யோசித்துக் கொண்டிருந்தார் படேல்.இதைக் கவனித்த காந்திஜி படேலை நோக்கி, ''என்ன யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள் படேல்?'' எனக் கேட்டார்.''பாபுஜி! என்ன இருந்தாலும் ஒரு ஜீவனுக்கு நீங்கள் இப்படித் துரோகம் செய்யக்கூடாது'' என்றார்.''எந்த ஜீவனுக்கு நான் துரோகம் செய்தேன்?'' என்று கேட்டார் காந்திஜி.''பாபுஜி! தாங்கள் இத்தனைக் காலமும் ஆட்டின் பாலை மட்டும்தான் அருந்தி வந்தீர்கள். இப்போது ஆட்டின் ஆகாரமாகிய வேப்பிலையையும் உண்ண ஆரம்பித்து விட்டீர்களே!'' என்றார்.உணவருந்துவதை ஒரு சில நிமிடம் விட்டுவிட்டு காந்திஜி உட்பட அனைவரும் சிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !