உள்ளூர் செய்திகள்

மருந்தும் நோயும்!

பெரும்பாலான நோய்கள் நுண்ணிய உயிரிகளால், பொதுவாக சொல்வது என்றால் கிருமிகளால் ஏற்படுகிறது.பிற நுண் உயிரிகளில் பெரும்பாலானவை பல நோய்களுக்கு மருந்தாக விளங்குகின்றது. 20-ம் நூற்றாண்டிற்கு முன் வரை ஏறக்குறைய எல்லா மருந்துகளும் இயற்கையினிடமிருந்து கிடைத்தவைகளே ஆகும். தாவரங்களும், பாக்டீரியாவும்தான் மிக முக்கியமான இயற்கை மருந்து மூலங்கள் ஆகும். நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை தயாரிப்பதில் பாக்டீரியாக்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. சில மருந்துகள் காளானிலிருந்து கிடைக்கிறது. அவைகளில் மிக முக்கியமானதும் அனைவரும் அறிந்ததுமான ஒன்று பென்சிலின்.மருத்துவ தாவரங்கள்!மேற்கத்திய மருந்துகளில் பெரும் பான்மை வகைகள் தாவரங்களில் இருந்துதான் கிடைக்கின்றன. இன்று, மருந்துகளில் அதிகம் கூட்டுமுறைகளில்தான் தயாரிக்கப்படுகின்றன.ஆஸ்பிரின். இவை சாலிசைலிக் ஆசிட்டில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அந்த ஆசிட் சாலிக் வகை புதர் செடியின் இலைகளிலும் தண்டுகளிலும் இருந்து கிடைக்கிறது. இந்த புதர் செடியின் வலிநிவாரண தன்மைகள் பல நூற்றாண்டுகளாக பிரசித்தம். அந்த காலத்தில் பிரசவ வலியை தாங்கி கொள்ள இந்த புதர் செடியின் இலைகளை மெல்லச் சொல்வார்கள்.டிஜிடலிஸ். இது இதய செயல்பாட்டினிற்கு ஊக்கம் அளிக்கும் மருந்து. பாக்ஸ்கிளவுஸ் என்னும் தாவரத்தின் இலைகள் மற்றும் விதைகளிலிருந்து இது தயாராகிறது. மார்பைன். இந்த மிக சக்தி வாய்ந்த வலி நிவாரணி ஒபியத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்டு கிடைக்கிறது. இந்த மருந்து இப்போது செயற்கையாகவும் தயாரிக்கப்படுகிறது.கொய்னா. இதுதான் பெரும்பாலான மலேரியா எதிர்ப்பு மருந்துகளின் மிக முக்கியமான சேர்க்கை பொருள். இது வெப்பமண்டல பகுதி மரமான, 'சின்சோனா' மரத்தின் பட்டையிலிருந்து எடுக்கப்படுகிறது. கொலம்பஸ் காலத்திற்கு முந்தைய காலத்திலிருந்தே தென் அமெரிக்க இந்தியர்கள், மலேரியாவிலிருந்து மீள இந்த பட்டையை மென்று இருக்கின்றனர்.வின்பிளாஸ்டைன், வின்கிறிஸ்டைன். இந்த மருந்து மடகாஸ்கரில் வளரும் ஒரு பஞ்சு செடி வகையான 'கான்தரான்தஸ் ரோஸஸ்' என்கிற செடியிலிருந்து கிடைக்கிறது. வின்பிளாஸ்டைன் பல நோய்களுக்கு மருந்தாக உள்ளது. வின்கிறிஸ்டைன், ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் மிகுவதால் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண உதவுகிறது.புதிய ஆராய்ச்சி!இன்றைய காலகட்டத்தில் மருத்துவ ஆராய்ச்சி என்பது செயற்கை மருந்துகளை செரிவூட்டுவதற்கும், இயற்கையான பொருட்களின் மருத்துவ குணங்களை பற்றி அறிந்து பயன்படுத்துவதற்கும் என முக்கிய குறிக்கோள்களை கொண்டுள்ளது. உதாரணத்திற்கு, அமெரிக்க ரோடு தீவு பல்கலைக்கழகத்தில், விஞ்ஞானிகள் ஒரு செல் உயிரிகளிலிருந்து கெமிக்கல்களை பிரித்து அதை கேன்சருக்கு எதிரான உயிர் காக்கும் மருந்தாக பயன்படுத்தும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கனடா நாட்டு மருத்துவ ஆய்வு குழு மார்பின்னைவிட 3000 மடங்கு சக்தி வாய்ந்த வலி நிவாரணியை உருவாக்கியது. இந்த மருந்து பவ்வர் மீனின் விஷத்திலிருந்து தயாரிக்கப்பட்டது. இந்த மருந்து பாதுகாப்பானது மற்றும் நீண்ட நேரம் நீடிக்க கூடியது.உயிர் கொல்லி வலி கொல்லி ஆனது!ஒவ்வொரு துளி இந்த புதிய பவ்வர் மீனின் வலி நிவாரண மருந்தும் 3 வாரங்கள் வரை வலியிலிருந்து நிவாரணம் தருகிறது. இது மிகவும் சக்தி வாய்ந்தது. இது தீமை இல்லாத வலி நிவாரணி.பென்சிலின்!பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிற உலகின் முதல் ஆண்டிபயாடிக் மருந்து கண்டுபிடிக்கப்பட்டது ஒரு விபத்துதான். 1928ம் ஆண்டு காயத்தை சீழ் பிடிக்க செய்து நிலமையை மோசமாக்கும் பாக்டீரியாவை பற்றி, அலெக்சாண்டர் ப்ளமிங் ஆய்வு செய்து கொண்டிருந்தார். தன்னுடைய ஆய்வு பாத்திரம் ஒன்றில் புதிய தோற்றம் ஒன்றை கண்டார். கூர்ந்து நோக்கியபோது அந்த புதிய தோற்றம் பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுப்பதை கண்டார். ப்ளமிங் அதனை ஆய்வு செய்ய மிக தீவிரமாக இறங்கினார். பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுத்த அந்த புதிய தோற்றத்தை தனியே பிரித்து அதனை அவர் அந்த ஆண்டின் இறுதியில் பென்சிலின் என பெயரிட்டார். காட்டு பாக்ஸ்கிளவுஸ்!பூரிட்டன் மற்றும் ஐரோப்பாவின் காடுகள் மற்றும் புதர்கள் நிறைந்த பகுதிகளில் டிஜிடலிஸ் தாவரத்தின் வகைகள் முதன் முதலில் தோன்றின. அதனிடமிருந்து ஒரு முக்கியமான மருத்துவ பொருளான டைடாலின் 1835-ம் ஆண்டு பிரித்து எடுக்கப்பட்டது.மாத்திரைக்கு காசு வாங்கி வந்த வக்கீல்கள்!தென் ஆப்பிரிக்க காலஹரியின் புதர் செடி பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஒரு ஒல்லியாகும் மாத்திரையினால் லாபம் அடைந்தனர். ஹீடியா கோர்டோனீ என்ற தாவரத்தை மென்று பசியை வென்றனர். வக்கீல்கள் இப்பகுதி மக்களுக்கு இந்த தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படும் மாத்திரைக்கு ராயல்டி வாங்கி தந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !