உள்ளூர் செய்திகள்

கல்லீரல் கவனம்!

உடலின் முக்கிய உள் உறுப்பு கல்லீரல். இது பாதிப்படைந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும். இந்த உறுப்பின் செயல்பாட்டை தெரிந்து கொள்வோம்...கல்லீரல் உடல் அழுக்குகளை நீக்குகிறது. பித்த நீரை உற்பத்தி செய்கிறது. ஊட்டச்சத்துக்களை சேமித்து வைக்கிறது. இதில் பாதிப்பு ஏற்பட்டால், மற்ற உறுப்புகளின் செயல்பாடு படிப்படியாக அபாய நிலைக்கு செல்லும். கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டால் உடலில் அரிப்பு ஏற்படும். சருமம் வறண்டு போகும். ஞாபக சக்தி குறையத் துவங்கும். உடல் சோர்வடையும். சிறுநீர் அடர்ந்து காணப்படும். திடீரென உடல் எடை கூடி குறையும். கண்கள் வறட்சியாக காணப்படும். இது போன்ற அறிகுறிகள் தெரிந்தால், உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். ஆரோக்கியம் பேண வேண்டும்.- மு.நாவம்மா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !