உள்ளூர் செய்திகள்

பச்சைப் பயிறு பால்!

தேவையானப் பொருட்கள்:பச்சைப் பயிறு - 1 கப்தேங்காய் துருவல் - 1 கப்ஏலக்காய் பொடி, நாட்டு சர்க்கரை, தண்ணீர் - தேவையான அளவுசெய்முறை:பச்சைப்பயிறை சுத்தம் செய்து, நீரில் எட்டு மணி நேரம் ஊற வைக்கவும். அதை சல்லடை வடிகட்டியில் போட்டு வைத்தால், எட்டு மணி நேரத்தில் முளை விட்டிருக்கும்.அதனுடன், தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி, நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டவும்.சுவைமிக்க, 'பச்சைப்பயிறு பால்!' தயார்! புரதச்சத்து மிக்கது. வளரும் குழந்தைகளுக்கு தேவையான ஊட்ட சத்தை தரும். தினமும் காலையில் குடித்தால் ஆரோக்கியம் மேம்படும்.- எம்.நிர்மலா, புதுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !