உள்ளூர் செய்திகள்

எப்படி... எப்படி?

நாம் மென்று சாப்பிடும் உணவை வயிற்றில் சுரந்திருக்கும் நொதிகள் மேலும் கூழாக்குகிறது. இதற்குக் குடற்சுவர்கள் பயன்படுகிறது. இது அசைந்து உணவை சிறுகுடற்பகுதிக்குக் கொண்டு செல்கிறது. (வெறும் வயிறாக இருக்கும்போது இந்தக் குடல் தசைகளின் இயக்கத்தைத்தான் நாம் வயிறு பிசைகிறது என்கிறோம்.)ஜீரணிக்கக் கூடியவற்றை மிகவும் கூழாக்கப்பட்ட உணவை 'விலி' என்ற உறிஞ்சிகள் ரத்த நாளத்திற்கு அனுப்புகிறது. இவ்வாறு பல தொடர் இயக்கத்தில் உணவிலிருந்து ரத்தம் பெறப்படுகிறது. ஜீரணத்தின் போது தலைகீழாக ஒருவர் இருந்தாலும் வாய்வழியே உணவு வராது. குடற்சுவர்களின் அழுத்தமும், ஈர்ப்பு விசையும் இங்கு வேலை செய்யாது என்பதும் காரணம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !