இளஸ் மனஸ்! - 149
அன்புள்ள பிளாரன்ஸ்...என் வயது 35; இல்லத்தரசியாக இருக்கிறேன். பள்ளி செல்லும் மகன், மகள் இருக்கின்றனர். அவர்களுக்கு கொடுத்து விடும் மதிய உணவு, 'வாயில் வைக்க முடியவில்லை...' என்கின்றனர். சுவையாக தரக் கேட்டு நச்சரிக்கின்றனர். வித்தியாசமான மதிய உணவு வகைகள் பற்றி நல்ல ஆலோசனை தாருங்கள்.- இப்படிக்கு, பெயர் வெளியிட விரும்பாத தாய்.அன்பு சகோதரி...குழந்தைகளுக்கு, மதிய உணவை பிளாஸ்டிக் டப்பாவில் கொடுத்து விடாதீர். எவர்சில்வர் பாக்சிலும், தண்ணீரை எவர்சில்வர் பிளாஸ்க்கிலும் கொடுத்து விடவும். சிறப்பான, சுவையான சில ரெசிபிகளை பட்டியலிட்டுள்ளேன்.* கீரை, மக்காச்சோளம், சான்ட்விச், ஆரஞ்சு பழம், பாதாம் பருப்பு* காரட் சாதம், வெள்ளரிக்காய் துண்டுகள், ஏதாவது பழத்துண்டுகள்* மினி பன்னீர் ஊத்தப்பம், தக்காளி கெச்சப் மற்றும் காரட் துண்டுகள்* கீரை, சப்பாத்தி, உருளைக்கிழங்கு மசாலா, ஆரஞ்சு பழம்* அன்னாச்சிபழம், பிரைடு ரைஸ், ஜவ்வரிசி அச்சு முறுக்கு, ப்ளூபெர்ரி பழங்கள்* சேமியா உப்புமா, நிலக்கடலை, சுண்டல், மாம்பழத்துண்டுகள்* எலுமிச்சை இட்லி, தயிர், ஸ்ட்ராபெர்ரி பழங்கள்* தேங்காய் பாலில் செய்த தக்காளி சாதம், கேரட் தயிர் பச்சடி, சிவப்பு திராட்சை* கீரை இட்லி, நிலக்கடலை சட்னி, உருளைக்கிழங்கு சிப்ஸ்* கீரை, மக்காச்சோள சாதம், தயிர், திராட்சை, பேரீச்சம்பழம்* பணியாரம், வெங்காய சட்னி, ஆரஞ்சுப்பழம்* முருங்கைக்கீரை இட்லி, உருளைக்கிழங்கு மசாலா, பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்பு* குடைமிளகாய் சாதம், தயிர், லட்டு, வெள்ளரிக்காய்* பீட்ரூட் சாத உருண்டை, உருளைக்கிழங்கு சிப்ஸ், பழம்* சப்பாத்தி, நுாடுல்ஸ், தயிர் பச்சடி, மாதுளம் பழம்* காய்கறிகள் மசித்து செய்யப்பட்ட இட்லி, வெங்காய சட்னி, பிஸ்கெட், திராட்சைப் பழம்* இனிப்பு உருளைக்கிழங்கு, தயிர் சாதம், வாழைப்பழ சிப்ஸ், ஏதாவது ஒரு பழம்* முட்டைக்கோஸ் புலாவ், தயிர், உருளைக்கிழங்கு சிப்ஸ், ஸ்ட்ராபெர்ரி, புளூபெர்ரி* தக்காளி பாஸ்த்தா, பேரீச்சம்பழம், பாதாம், பிஸ்தா பருப்பு, ப்ளூபெர்ரி பழங்கள்.இந்த உணவு வகைகளை, உரிய இடைவெளியில் சுற்று முறையில் வழங்கி, குழந்தைகளின் ஆரோக்கியம் காக்கவும். - அன்புடன், பிளாரன்ஸ்!