உள்ளூர் செய்திகள்

பலா விதை!

பலா விதையில் நிறைய இரும்புச் சத்து உள்ளது. உடலை பாதிக்கும் அனீமியா உள்ளிட்ட ரத்த குறைபாடுகளை தடுக்கும். இதில், வைட்டமின் - ஏ சத்து அதிகம். இது பார்வை திறனைக் கூர்மையாக்கும். மாலைக்கண் நோய் வராமல் தடுக்கும்; மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும். தலைமுடியின் வேர்க்கால்கள் வலுவாகி, முடி அடர்த்தியாக வளர உதவும்.இதை சமைத்து சாப்பிட்டால், வயோதிகம் காரணமாக, முகத்தில் உண்டாகும் சுருக்கத்தை குறைக்கும்; சருமத்தை பொலிவாக்கும்!பலா விதைகளை அரைத்து, தேன் மற்றும் பாலுடன் கலந்து, 'பேஸ் பேக்' போல் பயன்படுத்தலாம். பலா விதையை பொடி செய்து, நீருடன் கலந்து குடித்தால், செரிமானக் கோளாறுகள் தீரும்!- சவுமியா சுப்ரமணியன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !