உள்ளூர் செய்திகள்

ஜில்... ஜில்... பானகம்!

தேவையான பொருட்கள்:பனை வெல்லப் பொடி - 1 கப்எலுமிச்சை சாறு - 1 மேஜைக்கரண்டிஇஞ்சி - 1 துண்டுஏலக்காய் - 2உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:பனை வெல்லத்தை, இரண்டு டம்ளர் நீரில் கரைக்கவும்; அதில், இஞ்சி, ஏலக்காயை அரைத்து வடிகட்டிய சாறு, உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.இதை குளிர்பதன பெட்டியில் வைக்கவும். சுவைமிக்க, 'ஜில்...ஜில்... பானகம்' தயார். வெயிலில் களைத்து திரும்பும் போது குடித்தால் உடனடி உற்சாகம் ஏற்படும்; சோர்வு நீங்கி, புத்துணர்வு கிடைக்கும். நல்ல பசி எடுக்கும். அனைவரும் விரும்புவர்.- உஷா முத்துராமன், மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !