திரவ மழை!
தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளினாலும், ஆலைகளிலிருந்து வெளியேறும் தூசிகளினாலும், வாகனங்களிலிருந்து வரும் புகையினாலும், கேடுகள் நிறைந்த திரவங்கள் வெளியேறுவதாலும், சூழ்நிலைகள் மாசுபடுகின்றன. கந்தகங்கள், கழிவுகள் கசிவதால் பூமியின் தூய்மை கெடுகிறது. மாசு படிந்த காற்று, தூய காற்றுடன் கலப்பதால் காற்றும் கெட்டுப் போகிறது. இயற்கை பாழ்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் மழை பெய்யும் பொழுது தரைக்குள் மழையால் சேர்க்கப்படும், திரவக் கழிவுகளும், மற்றக் கழிவுகளும் திரவ மழையை பூமிக்குள் பரப்புகிறது. இப்படிக் கேடுற்ற திரவங்களை மழை பரப்புவதால், இதையும், 'திரவ மழை' என்கிறோம்.இந்தத் திரவ மழையால் மரங்களும், செடிகளும் பாழ்பட்டுப் போகின்றன. மண் வளம் கெட்டுப் போகிறது. இந்தத் திரவ மழை ஆற்றிலும், ஏரியிலும் கலப்பதால் அங்குள்ள மீன்களும் இறந்து போகின்றன. இப்படிப் பல விதக்கேடுகளை திரவ மழை கொடுக்கிறது.