நிலவுப் பெண்ணே!
அவள் கணவனிடம் பேசிப் பார்த்தாள். ஆனால், அவன் பதில் பேசவில்லை. அவள் தனது முன்னாள் வாழ்க்கையை எடுத்துரைத்தாள். தன் மூத்த சகோதரிகளைப் பற்றிக் கூறினாள். அவன் ஒரு வார்த்தையும் பேசவில்லை. தலையணைக்குள் முகத்தைப் புதைத்தப்படி அமைதியாக இருந்தான். எனவே, அவள் அவனுடன் பேசுவதை நிறுத்திவிட்டு, கண்ணை மூடி தூங்கினாள். உண்மையில் தூங்கவில்லை. நள்ளிரவு வந்தது. அவள் கண்ணை மூடியபடி தூங்குவது போல் நடித்துக் கொண்டிருந்தாள். அவள் கணவன் எழுந்தான். அவளைக் கவனித்துப் பார்த்தான். அவள் தூங்குவதாக எண்ணிக் கொண்டு மேல் மாடிக்கு சென்றான்.அவன் மாடிக்கு சென்ற சில வினாடிகளுக்குப் பின்னர், அவளும் எழுந்து சத்தம் இல்லாமல் மேல் மாடிக்குச் சென்றாள். அங்கு மறைந்து நின்று என்ன நடக்கிறது என்று கவனித்தாள்.சந்திரனைப் போல் வெண்ணிற முகம் கொண்ட ஒரு பெண் அங்கே நின்று கொண்டிருந்தாள். அவர்கள் இருவரும் பேசுவதைக் கவனமாய்க் கேட்டாள்.''எவ்வளவு நேரமாய் நான் காத்திருக்கிறேன். நீ ஏன் தாமதமாய் வந்தாய்?'' என்று அந்த நிலவுப் பெண் கேட்டாள்.அவள் தேவதை உலகத்தின் அரச குமாரி என்பதை அவள் அறிந்து கொண்டாள். அவளைக் கனவில் கண்டு, பின்னர் நேரில் பார்த்து அவர்கள் இருவரும் நண்பர்கள் ஆயினர் என்பதையும் அறிந்து கொண்டாள்.''என்னைத் தவிர வேறு யாருடன் பேசினாலும், நீ என் கணவனாய் இருக்க முடியாது என்பதை ஏற்கனவே உனக்கு கூறி இருக்கிறேன். அதன்படி நடந்து கொள்,'' என்றாள் நிலவு மங்கை.புதிதாக ஒரு பெண்ணை, என் பெற்றோர் தேர்வு செய்து, தனக்கு மனைவியாக அனுப்பி இருப்பதாக அவன் சொன்னான்.''நீ அவளுடன் பேசுவாயா? அப்படி நீ அவளுடன் பேசினால், மறுநிமிடமே நான் உன்னுடன் பேச மாட்டேன். இந்த இடத்துக்கும் வர மாட்டேன்!'' என்று கோபமாக பேசினாள்.''நான் அவளுடன் பேசுவதே இல்லை. அவள் பேசினாலும், நான் தலையணைக்குள் முகத்தைப் புதைத்துக் கொள்வேன்!'' என்று அவன் கூறினான்.அதைக் கேட்டு நிலவுப் பெண் அதிகமாக மகிழ்ந்தாள்.அவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போது, அவன் மனைவி சத்தம் இல்லாமல் அமைதியாக மாடியில் இருந்து கீழே இறங்கி தனது கணவன் அறைக்குள் வந்தாள். கதவைப் பூட்டிக் கொண்டு படுக்கையில் படுத்தாள்.சில வினாடிகளுக்குப் பிறகு அவள் கணவன் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தான். அவன் அறைக் கதவு உள்ளே பூட்டப்பட்டிருந்தது.கதவை பலமாக தட்டினான். கதவு திறக்க வில்லை.''நீர் என்னுடன் சிறிது நேரமாவது பேசுவேன்! என்று ஆணையிட்டுக் கூறினால்தான் நான் கதவை திறப்பேன்,'' என்றாள்.கதவைத் திறக்குமாறு கெஞ்சிக் கேட்பதைத் தவிர அவனுக்கு வேறு வழி தெரியவில்லை.அவனும் அதற்கு ஒப்புக் கொண்டு, கதவை திறக்குமாறு கேட்டான்.அவன் பேசியதைக் கேட்டு, அவள் கதவைத் திறந்தாள். அவன் உள்ளே வந்து அவளுடன் பேச்சுக் கொடுத்தான். அதே நொடியில் அவன் மாடிப்படிக்கு செல்லும் கதவை ஒரு சுவர் எழும்பி மறைத்தது. அவனால் இனி ஒருபோதும் அங்கே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அத்தோடு நிலவுப் பெண்ணை மறந்து, தன் மனைவியின் அன்பில் மயங்கி இன்பமாக வாழ்ந்தான்.அதை அறிந்த அவன் தாயும், தந்தையும் மகிழ்ச்சி அடைந்தனர். அதோடு, தன் மூன்று மகள்களுக்கும் நல்ல முறையில் திருமணம் நடந்ததை எண்ணி அந்த விதவை தாய் மகிழ்ச்சி அடைந்தாள்.முற்றும்.