உள்ளூர் செய்திகள்

காலை வாரும், பலாசோ பேன்ட்!

ஒரு காலத்தில், பிரிக்க முடியாதது பெண்களும், 'லெகின் பேன்ட்'டும் என்று சொல்லும் அளவிற்கு, பெண்கள் உடலோடு மட்டுமல்ல, மனதோடும் ஒட்டி இருந்தன லெகின் பேன்ட்கள். கல்லுரி மாணவியர், அலுவலகப் பெண்கள், நடுத்தர, வயதானவர் என, அனைத்து பெண்களின் தவிர்க்க முடியாத உடைகளில், 'லெகின் பேன்ட்ஸ்' ஒன்றானது. பெண்களை மகிழ்விக்கும் இந்த லெகின், பல வண்ணங்களில் மிகவும் சவுகரியமான உடைகளில் ஒன்று என பெண்களால் பாராட்டப்பட்டது.அதே சமயம், ஆண்கள் வெறுக்கும் உடைகளில் ஒன்று, இந்த லெகின் எனலாம். காரணம், டைட்டாக, உடலோடு ஒட்டி, பெண்களின் உடல் அழகை அப்படியே பிரதிபலிப்பது தான் காரணம்.மகா குண்டு பெண்கள், லெகின் அணிந்து செல்லும் போது, மிகவும் கொடுமையாகத்தான் இருக்கிறது என்று ஆண்கள் கூறுவர். இரு தொடைகளிலும், 'கட்' வைத்த டாப் அணிந்த பெண்கள், இரு சக்கர வாகனங்களில் செல்லும் போது, தொடை, கால் பகுதிகள் அப்படியே தெரிவதால், ஆண்களுக்கு பத்திக் கொண்டு வரும்.'நீங்க என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கோங்க... எங்களுக்கு, 'லெகின்' ரொம்ப வசதியா இருக்கு' என, பெண்களின் ஒட்டு மொத்த ஆதரவும் லெகினுக்கே இருக்கின்றன. அப்படிப்பட்ட லெகினை விட்டு விட்டு, இன்று வயதானவர்கள் கூட, வேறு ஒன்றுக்கு மாறி விட்டனர்; அதான், 'பலாசோ பேன்ட்'ங்க... என்னது புரியலியா...அந்த காலத்துல... பம்பாய் மிட்டாய் விற்ற படி, மணியடிச்சு கிட்டு வரும், வட மாநில சகோதர்கள் போட்டிருப்பர் பாருங்க, ஒரு தொள தொள பேன்ட்... அந்த பேன்ட்டு தாங்க, இன்றைய பலாசோ பேன்ட். துபாய், அபுதாபி போன்ற, அரபு நாடுகளில், தற்போதைய, 'பேஷன்' இது; நம் ஊரிலும் வேகமாக பரவி விட்டது.இந்த பலாசோ பேன்டுக்கு, லாங் டாப், ஷார்ட் டாப், சுடிதார் டாப்ஸ் என, எதை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்... கொளுத்தும் வெயிலுக்கு, லுாசா, நல்ல காற்றோட்டமாக இருப்பதால், இப்போது பெண்களின் ஒட்டு மொத்த ஆதரவும், இந்த பேன்ட்டுக்கு மாறி விட்டது.பலாசோ பேன்ட், டாப்ஸ் போட்டு, 'காகிள்ஸ்' எனப்படும், பெரிய கண்ணாடி அணிந்து, முடியை லுாசாக விட்டு, 'ஹை ஹீல்ஸ்' அணிந்து சென்றால், செம, 'ஸ்டைலாக' இருக்கும். பாட்டி முதல், பேத்தி வரை இப்போது, பளாஸோ பேன்டுக்கு மாறி விட்டனர்.ஆனால் ஒன்று, இந்த பேன்டின் அடிபாகம் பெரிதாக இருப்பதால், வேகமாக நடக்கும் போது, ஒரு காலின் கட்டை விரல், மற்ற கால் பேன்ட்டில் மாட்டி, கீழே விழுந்து, பெண்களுக்கு, கை, கால் உடைப்பதில், மன்னனாக உள்ளது. அதாவது, காலை வாருவதில் மன்னன் என்று சொல்லலாம். குறிப்பாக, மாடி படிக்கட்டுகளில் ஏறும் போது, பலாசோ பேன்ட் அணிந்தவர்கள் மிக மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.பலாசோ விரும்பிகளே... இதை அணியும் போது,தொங்க தொங்க போடாதீங்க; பாதத்துக்கு மேல் போட்டுக்கொள்வது தான் பேஷனும் கூட; அப்போது தான் தடுக்கி விழமாட்டீர்கள். இருந்தாலும், வேகமாக நடக்கும் போது, கவனமா நடப்பது நல்லது!- தேவகி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !