உள்ளூர் செய்திகள்

அன்னையின் வளர்ப்பு!

நோபல் பரிசு பெற்ற ஒரு விஞ்ஞானி, இளம் வயதில் சிறந்த அறிவாளியாக விளங்கினார்; ஆனால், எந்த வேலையையும், ஒழுங்குடன் செய்ததில்லை.அவரின் போக்கு கண்டு வருந்திய தாய், பூதக்கண்ணாடியும், காகிதங்களையும் எடுத்து வர கூறினார். முதலில் வெறும் காகிதத்தில் வெயில் படுமாறு காட்டினார்.பின், பூத கண்ணாடி வழியாக ஒளியை காகிதத்தில் பாய்ச்சினார். சற்று நேரத்தில், ஒளிக் குவிந்து காகிதத்தை எரித்தது.இதை கவனித்த சிறுவன், 'முதலில் காகிதத்தை நெருப்பு எரிக்கவில்லை; பின், எரிந்ததே...' என வினவினான்.'ஒரு முகப்படுத்திய ஒளிக் கதிர்கள், நெருப்பாகி காகிதத்தை எரித்தது; ஆனால், ஒருமுகப்படுத்தாத கதிரின் ஒளியால் நெருப்பு உண்டாகவில்லை; அதுபோல், நீயும், உள்ளத்தை ஒரு முகப்படுத்தினால், எந்த வேலையிலும், வெற்றி அடையலாம்...' என்றார்.அந்த வார்த்தைகளை மனதில் பதித்து செயல்பட்ட சிறுவன் வேறு யாருமில்லை... உலகம் போற்றும் விஞ்ஞானி சி.வி.ராமன் தான்.- மாலா பழனிராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !