உள்ளூர் செய்திகள்

வேப்பம் பூ குழம்பு!

தேவையான பொருட்கள்:உலர்ந்த வேப்பம் பூ - 2 தேக்கரண்டிதக்காளி - 5பூண்டு - 5 பல்பெரிய வெங்காயம் - 1உப்பு, புளி, தேங்காய் - சிறிதளவுஎண்ணெய், கடுகு, வெந்தயம், பெருங்காயம், மிளகாய், மஞ்சள் துாள் - தேவையான அளவு.செய்முறை:தக்காளியை எண்ணெயில் வதக்கி, தேங்காயுடன் அரைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, வெந்தயம், பெருங்காயத்துாள் தாளித்து, வேப்பம் பூ சேர்க்கவும். வதங்கியதும், நறுக்கிய வெங்காயம், புளி கரைசல் சேர்க்கவும். பின், அரைத்த தக்காளி கலவை, உப்பு, மஞ்சள், மிளகாய்த்துாள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். சுவைமிக்க, 'வேப்பம் பூ குழம்பு' தயார். சாதத்தடன் பிசைந்து, வாரம் ஒருமுறை சாப்பிடலாம். வயிற்றில் புழு, பூச்சித் தொல்லையைக் கட்டுப்படுத்தும். நலம் பேணும். - எஸ்.நாகலட்சுமி, சென்னை.தொடர்புக்கு: 97898 45997


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !