உள்ளூர் செய்திகள்

நம் பாரதப் பெருமை பரம்வீர் சக்ரா!

'பரம்வீர் சக்ரா' பேரை கேட்டாலே உள்ளம் சும்மா பெருமிதத்தில் கொப்பளிக்கிறது அல்லவா!இந்தியாவின் போர் வரலாற்றில் எண்ணற்ற வீரர்கள் பதக்கங் களை பெற்றுள்ளனர். இந்திய ராணுவத்தின் மிக உயர்ந்த விருது 'பரம்வீர் சக்ரா'.இந்தியாவின் மிக உயர்ந்த விருதான, 'பாரத ரத்னா'விற்கு இணையாக இந்த விருது மதிக்கப்படுகிறது.இந்தியா சுதந்திரம் பெற்ற போது இந்திய ராணுவத்தில் உயர்ந்த விருது ஒன்று உருவாக்கப் பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.அப்போதைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்திய ராணுவ தளபதி 'ஹீராலால் அடால்' என்பவரை அழைத்து இது குறித்து தீவிரமாக விவாதித்தார்.அதன் பின்பு தளபதி ஹீராலாலுக்கு அந்த விருதை உருவாக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டது.அப்போது இந்தியாவின் பாரம்பரியமும், வரலாறும் நன்கு அறிந்த நபர் மட்டுமே இந்த பதக்கத்தை வடிவமைக்க வேண்டும் என்று இந்திய பாரம்பரியத்தின் மீது தீவிர பற்று கொண்ட சக ராணுவ தளபதியின் மனைவி சாவித்ரி கனோல்கரிடம் பதக்கம் வடிவமைக்கும் பொறுப்பை கொடுத்தார் ஹீராலால் அடால்.இந்திய புராணங்களில் இந்திரனின் வஜ்ராயுதம் மிக சக்தி வாய்ந்த ஆயுதமாக கருதப்பட்டது.அதன்படி வஜ்ராயுதம் முக்கிய ஆயுதமாக முதலில் தேர்வு செய்யப்பட்டது.இந்திய வரலாற்றின் முக்கிய பேரரசரான அசோகரின் அசோக சின்னமும், இந்தியாவின் தேசிய மலரான தாமரையும் தேர்வு செய்யப்பட்டது.வெண்கலப் பதக்கத்தின் முன் பகுதியில் அசோக சின்னமும், அதை சுற்றி நான்கு வஜ்ராயுதங்களும் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டது.பதக்கத்தின் பின்புறத்தில் தாமரை சின்னம் இருப்பது போல பொறிக்கப்பட்டது.அதன் அருகில், 'பரம் வீர் சக்கரம்' என்று இந்தி மொழி யிலும், ஆங்கில மொழியிலும் எழுதப்பட்டது.இந்த விருது அதிகாரப்பூர்வ மாக 1950ம் ஆண்டு முதல் முறையாக வழங்கப்பட்டது.இந்த விருது முதன் முதலில் மேஜர் சோமனாத் சர்மாவுக்கு வழங்கப்பட்டது.ஒவ்வொருவரும் நாட்டிற் காக பெருமளவு சேவை செய்ய வேண்டும் என்ற ஆசையுடன், லட்சியத்துடன் வாழ்வதே குடியரசு தினத்திற்கான நமது கனவாய் இருக்க வேண்டும்.சரியா குட்டீஸ்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !