உள்ளூர் செய்திகள்

சம்மணம் போட்டு உட்காருங்க!

பெரும்பாலான நேரங்களில், நாம், காலை தொங்க வைத்தே உட்காருகிறோம். காலை தொங்க வைத்து உட்காரும் போது, நம் உடலின் ரத்த ஓட்டம், இடுப்பிற்கு கீழ் பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கின்றன. இதனால், பல உடல் நல கோளாறுகள் உருவாகின்றன என்பதை அறிவீர்களா குட்டீஸ்!அதற்கு பதிலாக, சம்மணம் போட்டு உட்கார்ந்தால், இடுப்புக்கு மேல், ரத்த ஓட்டம் அதிகமாக செல்லும். இதனால், உடலின் மிக முக்கிய உறுப்புக்களான, சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை போன்றவைக்கு அதிகமான ரத்த ஓட்டம் கிடைக்கும்; நம் உடலுக்கு, அதிக ஆரோக்கியமும், சக்தியும் கிடைக்கும்.அதை போல, சாப்பிடும் போது, சம்மணம் போட்டு உட்கார்ந்து சாப்பிட்டால், வயிற்றுப்பகுதிக்கு ரத்தஓட்டம் சென்று, நன்றாக ஜீரணம் நடைபெறும். முடிந்த வரை சம்மணம் போட்டு உட்காரும் பழக்கத்தை ஏற்படுத்திக்கோங்க...உங்களால் சம்மணம் போட்டு உட்காரமுடியவில்லை என்றால், உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து வைத்துள்ளீர்கள் என்று நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்...


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !