சளியிலிருந்து விடுதலை
உடலில், வியர்வைக்கு உள்ள முக்கியத்துவம் சளிக்கும் உண்டு. ஆரோக்கிய உடல், சளியை உருவாக்கியபடியே இருக்கும். அதை உற்பத்தி செய்யும் திசுக்கள், வாய், மூக்கு, தொண்டை, நுரையீரல், இரைப்பை, குடல் போன்ற உள் உறுப்புகளில் உட்பூச்சு போல் அமைந்துள்ளன.சளியில், நொதி, புரதம், உயிரணுக்கள் நிறைந்துள்ளன. இயற்கையாக விளையும் பொருட்களை, சாப்பிடும்போது, எளிதில் ஜீரணமாகும்.ஆனால், சமைத்த, ரசாயனம் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், எளிதில் ஜீரணமாகாது. அதை ஜீரணிக்க வைக்க, உடல் திசு சளியை அதிகமாக உற்பத்திசெய்யும். அது, வியர்வை போல், கழிவாக வெளியேறும்.அலோபதி மாத்திரை உட்கொண்டால் சளி, உடலுக்குள் அடங்கி, இறுகி கட்டியாகி, நுரையீரலில் படியும். இதை, வெளியேற்ற, உள்ளுறுப்புகள் முயற்சித்துக்கொண்டே இருக்கும். இயற்கை முறையில் விளைந்த, காய்கறி, பழம், கீரைகளை அதிகம் உண்டால், இயல்பாகவே சளி வெளியேறி விடும்.வழக்கத்தை விட அதிகமாக உடல் சூடானாலும், குளிர்ச்சியாக இருந்தாலும், அதிகமாக சளி உருவாகும். சூட்டால் உருவாகும் சளி, மூக்கு வழியாக வெளியேறாது; அது தொண்டை, மூக்கு தண்டின் இடையே தங்கி, வறட்டு இருமலை உருவாக்கும்; மஞ்சள் நிறத்தில் இருக்கும். இந்த வகை சளியை, வாய் வழியாக தான் வெளியேற்ற வேண்டும்.குளிர்ச்சியால் உருவாகும் சளி, பச்சை அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கும்; இதை, மூக்கு வழியாக வெளியேற்றலாம். சளியை, இயற்கை முறையில் வெளியேற்ற வேண்டுமே தவிர, மாத்திரை, மருந்து எடுத்து உடலில் தங்க வைத்துவிடக் கூடாது!சளியை வெளியேற்ற சில அறிவுரைகள்:* மஞ்சள், மாதுளம் பழச்சாறு போன்றவற்றை சாப்பிடலாம். இவற்றில் நாட்டுச்சர்க்கரை, வெல்லம், கருப்பட்டி, தேன் கலக்கலாம். இதை, முற்பகல், 11:00 மணி முதல் பிற்பகல், 3:00 மணிக்குள் சாப்பிடுவது நல்லது* இரண்டு மிளகு, நான்கு சீரகம் போட்டு, தண்ணீரை கொதிக்க வைத்து, தொடர்ந்து பருகி வரலாம்* பூண்டை, பச்சையாக உட்கொள்ளலாம். இரண்டு பூண்டு பற்களை பொடியாக வெட்டி, ஒரு டம்ளர் நீருடன் கொதிக்க வைத்தும் குடிக்கலாம்* தேங்காய் எண்ணெயுடன், கற்பூரம் கலந்து சூடாக்கி மார்பு மீது தடவினால் சளி, இருமல் குறையும். மூக்கடைப்பு ஏற்பட்டால், சுடுநீரில் உப்பு கலந்து, சுத்தமான பருத்தி துணியில் தொட்டு துடைக்கலாம். இவை, குழந்தைகளுக்கு உகந்த முறைகள்* ஏலக்காய் பொடியுடன், நெய் கலந்து சாப்பிட, மார்பு சளி நீங்கும் * வல்லாரை சூரணத்தை, தேன் கலந்து சாப்பிட்டால் சளி, இருமல் நீங்கும் * சின்ன வெங்காயசாறு, தேன், இஞ்சி சாறு மூன்றையும் சம அளவில் கலந்து தினமும், ஒருவேளை என, இரண்டு நாட்கள் சாப்பிட்டால் சளித் தொல்லை அகலும்.- பொ.பாலாஜி கணேஷ்