புளியங்கொழுந்து துவையல்!
தேவையான பொருட்கள்: புளியங்கொழுந்து - 1 கப்காய்ந்த மிளகாய் - 4பூண்டு - 5 பல்கடலைபருப்பு, உளுந்தம் பருப்பு - தலா 1 தேக்கரண்டிஇஞ்சி, தனியா, உப்பு - தேவையான அளவுகடுகு, நல்லெண்ணெய் - சிறிதளவு.செய்முறை:சுத்தம் செய்த புளியங்கொழுந்து, காய்ந்த மிளகாய், பூண்டு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, பூண்டு, தனியாவை தனித்தனியாக வறுத்து, உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும். பின், நல்லெண்ணெயை சூடாக்கி, கடுகு தாளித்து, அரைத்த கலவையை சேர்த்து கிளறி இறக்கவும். சுவை மிக்க, 'புளியங்கொழுந்து துவையல்' தயார்.சுடுசாதம், இட்லி, தோசையுடன் பக்க உணவாக சாப்பிடலாம்!- என்.பசுபதி, திருப்பூர்.