கடவுளைக் காட்டு!
ரோம சக்கரவர்த்தி ஹட்ரியன், யூத மதகுரு ஜாஸ்வா என்பவரை அழைத்து, 'கடவுளைக் காண விரும்புகிறேன்; அவரைக் காட்டு...' என்றார்.'அது முடியாத ஒரு காரியம்; அவரைப் பார்க்கக் கூடாது...' என்றார், மதகுரு. 'பார்த்தே ஆக வேண்டும்' என, சக்கரவர்த்தி அடம்பிடித்தார்.அது கோடைகாலம். சக்கரவர்த்தியை வெளியே அழைத்துச் சென்ற மதகுரு, 'அண்ணாந்து சூரியனைப் பாருங்கள்...' என்றார். 'அது கஷ்டமான காரியம்; முடியாது...' என்றார் சக்கரவர்த்தி.'இறைவனால் ஆக்கப்பட்டது தான் சூரியன்; அதையே பார்க்க இயலவில்லை என்றால், இறைவனை எப்படி பார்க்க முடியும்...' என்றார் மதகுரு. அமைதியானார் சக்கரவர்த்தி.