உள்ளூர் செய்திகள்

அதிமேதாவி அங்குராசு: கடின உழைப்பு நோயை தடுக்கும்!

மனிதனின் நடவடிக்கையை கட்டுப்படுத்துகிறது மூளை. இதன் செயல்பாட்டை அறிவியல் ரீதியாக அலசி, வியப்பான முடிவுகள் முன்வைத்துள்ளது ஒரு ஆய்வு. அமெரிக்க விஞ்ஞானி ராபர்ட் மோரீஸ் சபோல்ஸ்கி இதை மேற்கொண்டுள்ளார். ஆய்வில் மனிதனின் நடத்தையை கட்டுப்படுத்துவது மூளையில் சில சுரப்பிகள் என தெரியவந்துள்ளது.மனித மூளை...* காரண காரியங்களை அறிந்து, அலசி முடிவெடுக்கும் திறனை, 21ம் வயதில் தான் பெறுகிறது* இளம் வயதில் எடுக்கும் உணர்வு பூர்வ முடிவுக்கு சரியான காரண காரியங்களை அலசுவதில்லை * உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழலில், தப்பி பிழைக்கும் வகையில் தகவமைந்துள்ளது* நவீன வாழ்வில் மன இறுக்கத்தை தாங்கும் சக்தியை முழுமையாக பெறவில்லை மூளை.அதாவது, மனிதன் காட்டில் வாழ்ந்த காலத்தில், யானை, சிங்கம், பாம்பு போன்ற விலங்குகளுக்கு பயந்திருந்தான். அவை உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இருந்தன. அவற்றிடம் இருந்து தப்பும் வகையிலே உடலும், மூளையும் வடிவமைந்துள்ளது. தற்போதை வியாபார ஏற்ற இறக்கம், பங்குச்சந்தை சரிவு, வேலை இழப்பு, குடும்ப நெருக்கடி, நம்பிக்கை துரோகம் போன்றவற்றை தாக்குப் பிடிக்கும் வகையில் மூளையில் மாற்றம் இன்னும் ஏற்படவில்லை என சுட்டிக் காட்டுகிறது.ஆய்வு முடிவில்...* மனதில் ஏற்படும் நெருக்கடிகளே கவலையாக மாறுகிறது* அது உடல் ரத்த ஓட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது* அந்த பாதிப்பு இதய நோய்களுக்கு காரணமாக அமைகிறது. கடுமையான பசி, மயக்கம் உண்டாகும் போது, மூளையின் திறன் மாறுபடுவதாகவும் குறிப்பிடுகிறது. மூளை பலநேரங்களில் தானாகவே இயங்கி வழிகாட்டும். குறிப்பாக, உயிருக்கு பாதுகாப்பில்லாத சூழல் ஏற்படும் போது மின்னல் வேகத்தில் இயங்கும். தக்கவாறு முடிவுகள் எடுத்து செயல்பட துாண்டும். ஆனால், எதிர்காலத்தை திட்டமிடுவதில் பொறுமை காட்டி மிக மெதுவாக இயங்கும். கடின வேலை செய்வதை விரும்பது; இசையில் லயிப்பது போன்ற உடனடி இன்பம் தரும் செயல்களிலே அதிக ஆர்வம் காட்டும். இது போன்ற நிலை ஏற்படும் போது கடின பணிகள் செய்வதற்கு, மூளையை பழக்கவேண்டும். அதற்கு, கடுமையான பயிற்சியே உதவும் என மனித நடத்தையை பல கோணங்களில் ஆராய்ந்துள்ள விஞ்ஞானி சபோல்ஸ்கி தெரிவித்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த இவர், உடல் இயங்கியல், நரம்பணுவியல், உடல்சார் மானிடவியல் போன்ற துறைகளில் ஆய்வு நடத்தி வருகிறார். இது தொடர்பாக பல புத்தகங்களை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அவற்றை முன்னணி பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன.- என்றென்றும் அன்புடன், அங்குராசு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !