உள்ளூர் செய்திகள்

மாற்று சிந்தனை!

சென்னை, ஜி.கே. ஷெட்டி மேல்நிலைப் பள்ளியில், 2005ல் கணித ஆசிரியையாக பணிபுரிந்தேன். பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் செயல்திறன் பற்றி, பள்ளி பொதுக்குழுவில் காரசார விவாதம் நடந்தது.மாணவ, மாணவியரை சராசரி, சராசரிக்கு கீழ், சராசரிக்கு மேல் என, வகைப் பிரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி பிரித்து குழுவாக்கினோம். சராசரிக்கு மேல் நன்றாகப் படிப்போருக்கு கற்பிப்பததையே விரும்பினர் ஆசிரியையைகள்.முதன்மை தலைமையாசிரியையாக இருந்த கிரிஜா ஷேசாத்திரி மட்டும் அதற்கு மாற்று கருத்தாக, 'ஏற்கனவே சிறப்பாக படிப்போருக்கு மேலும் பயிற்சியளிப்பதில் பயன் என்ன... அதில் என்ன சவால் இருக்க போகிறது...' என கேள்வி எழுப்பினார். அது சிந்திக்க வைத்தது.புரிந்து கொள்ளுதலில் திறன் குறைந்திருந்தோரை அக்கறை, அன்புடன் அணுக துாண்டியது. கணித பாடத்தை வேப்பங்காயாக எண்ணி பயந்திருந்தோரை இதமாக அணுகி எளிய பயிற்சிகள் வழியாக கற்பித்தேன். அது பெரும் மாற்றம் நிகழ்த்தியது. எனக்கு நல்லாசிரியர் விருது பெற்று தந்தது; மாணவர்கள் மனதில் உயர்ந்த இடம் பிடிக்க வைத்தது.என் வயது, 67; கற்பித்தலில் மாற்று சிந்தனையை புகுத்தி, என்னை உயர்த்திய அந்த முதன்மை தலைமையாசிரியை தந்த அறிவுரை இன்றும் நினைவில் நிற்கிறது.- ம.ரஞ்சனி தேவி, சென்னை.தொடர்புக்கு: 94446 34436


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !