பனங்கிழங்கு பாயசம்!
தேவையான பொருட்கள்:பனங்கிழங்கு - 4தேங்காய் பால் - 1 கப்பனை வெல்ல கரைசல் - 150 மி.லி.,ஏலக்காய்த்துாள், நெய், முந்திரி, திராட்சை, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:பனங்கிழங்கை தண்ணீர் சேர்த்து வேக வைத்து, தோல் நீக்கி விழுதாக அரைக்கவும். வாணலியில், நெய் சூடானதும் அரைத்த விழுது, பனை வெல்ல கரைசல் சேர்த்து, கொதிக்க விட்டு இறக்கவும். சூடு தணிந்த பின், தேங்காய் பால், ஏலக்காய் துாள், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும்.சுவைமிக்க, 'பனங்கிழங்கு பாயசம்!' தயார். அனைத்து வயதினரும் விரும்பி பருகுவர்.- ம.வினோதா, தேனி.