உள்ளூர் செய்திகள்

அன்னாசி பழ பாயசம்!

தேவையான பொருட்கள்: அன்னாசி பழத்துண்டு - 1 கப் பச்சரிசி - 1 கப் பாதாம், முந்திரி, நெய் - சிறிதளவு சர்க்கரை, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை: அ ன்னாசி பழத்துண்டுகளை அரைத்து சாறு எடுக்கவும். பாதாம் பருப்பை நீரில் ஊற வைத்து, தோல் நீக்கி நன்றாக அரைக்கவும். பச்சரிசியை வறுத்து ரவை போல பொடியாக்கவும். பாத்திரத்தில் தண்ணீர் கொதித்ததும், அரிசி ரவையை போட்டு கிளறவும். வெந்ததும், சர்க்கரை, நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம் விழுது, நெய், அன்னாசி பழச்சாறு கலந்து இறக்கவும். புதுமையான, 'அன்னாசி பழ பாயசம்!' தயார். சுவை மிக்கது. அனைத்து வயதினரும் விரும்பி பருகுவர். - எஸ்.ராஜம், திருச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !