உள்ளூர் செய்திகள்

தனித்துவம்!

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அரசு ஆண்கள் பள்ளியில், 1974ல், எஸ்.எஸ்.எல்.சி., படித்தபோது, கணித ஆசிரியராக இருந்தார் வேணுகோபால். தனித்துவ திறனுடன் பாடங்களை விளக்குவார். பொறுமையை கடைபிடித்து கற்றுக்கொடுப்பார். பாடங்களை புரிந்து கொள்வதில் ஏற்பட்ட குழப்பத்தால் அரையாண்டு கணித தேர்வில், 12 மதிப்பெண்களே பெற்றிருந்தேன். இதனால் மனமுடைந்து ஆர்வம் குன்றி திரிந்தேன். என்னை பரிவுடன் அழைத்து, 'பயமுறுத்தும் பாடமல்ல கணிதம்; முறைப்படி அணுகினால் ஜொலிக்கலாம்...' என அறிவுரைத்து தக்க பயிற்சிகள் தந்து நம்பிக்கையூட்டினார். இரவு பகல் பாராமல் கடினமாக உழைத்தேன். பொதுத்தேர்வில், 83 மதிப்பெண்கள் பெற்று உயர்ந்தேன்.என் வயது, 65; அரசு உதவி பெறும் பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். பணிக்காலத்தில் என் வகுப்பறை அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து உயர்வதற்கு உற்சாகப்படுத்தியுள்ளேன். திறமையை துாண்டி வாழ்வில் வழிகாட்டிய கணித ஆசிரியர் வேணுகோபால் பாதங்களில் என் நன்றியை சமர்ப்பிக்கிறேன்!- எஸ்.பாலசுப்ரமணியன், காஞ்சிபுரம்.தொடர்புக்கு: 63836 53400


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !