உள்ளூர் செய்திகள்

தட்ப வெப்ப நிலை!

மிலூடின் மிலன்கோவிட்சு 1879-1958. 1914 முதல் 1918 வரை பூமி ஆராய்ச்சியாளர் மிலூடின் மிலன்கோவிட்சு பூமியை ஆராய்ந்து கொண்டிருந்தார். புத்தபெஸ்ட்டில் நடந்த போரில் அவர் கைது செய்யப்பட்டார். ஆனால், கைதிற்கு முன் அவர் ஆராய்ச்சியில் ஒரு தீர்விற்கு வந்து இருந்தார்.பூமியை தொடும் சூரிய கதிரின் தன்மையை பொறுத்தே, பூமியில் தட்ப வெப்ப நிலை மாறுபாடுகள் ஏற்படுகிறது என்பதுதான் அந்த தீர்வு. மூன்று காரணிகளும் இதற்கு உண்டு. முதலாவது, பூமியின் சுழற்சி வட்டமாக இருந்து பின் நீள் வட்டத்தில் மாறி பின் வட்ட சுழற்சிக்கு மாறும். இது போன்ற மாற்றம் 1 லட்சம் ஆண்டுகளில் நடைபெறும். சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள சராசரி இடைவெளி 150 மில்லியன் கி.மீ. நீண்ட நீள் வட்ட சுழற்சியின் போது இந்த சராசரி இடைவெளி 140 மில்லியன் கி.மீ. முதல் 160 மில்லியன் கி.மீட்டர்கள் வரை பிரதி ஆண்டும் வேறுபடும்.பூமி பெறும் வெப்பம் இந்த இடைöளி தூரத்தினால் மாறுபடும்போது, தட்ப வெப்ப நிலையில் மாற்றங்கள் நிகழ்கிறது. இரண்டாவது பூமி சுற்றும் போது தன்னை தானே சுற்றி கொண்டு சுற்றுவதால் ஒரு முழு வளையம் பிரதி 26,000 வருடங்களுக்கு ஏற்படுகிறது.அந்த நேரத்தில் வட போலார் பகுதிகள் சூரியனிலிருந்து அதிகம் விலகி இருக்க, பனிகாலம் அப்பகுதியில் அதிக காலம் நிலவுகிறது.மூன்றாவது பூமியின் ஈக்குவேட்டர் மற்றும் சூழற்சிக்கு இடையே உள்ள கோணங்கள் 40 ஆயிரம் ஆண்டுகளில் வேறுபடும்.இந்த மூன்று வெவ்வேறு சுழற்சி வட்டங்கள் ஒன்றாய் நிகழலாம்.சூரிய ஒளியின் மாற்றத்தால் கடும் பாலைவனம் கடும் பனி பிரதேசம் என உருவாகிறது என்பதை மிலூடின் உணர்ந்து கொண்டார். ஒரு பகுதி பெரும் சூரிய ஒளியில் குறைபாடு ஏற்பட, அப்பகுதியில் பனி இடம்பெறுகிறது. மிலூட்டின் ஆராய்ச்சிகள் 1970-ம் ஆண்டுகளில் மேரிலேன்ட் பல்கலைக்கழக ஆனந்தூ வெர்நேகர் தொடர்ந்தார்.இன்றைய முன்னேற்றமடைந்த அறிவியல் மூலம் மேற்கண்ட அளவுகளை, மாற்றங்களை துல்லியமாக கனிக்க முடிகிறது. மிலூட்டின் தத்துவங்கள் இன்றும் நமக்கு பயன்படுகிறது. இதே போன்ற மாற்றங்கள் நமது அண்டை கிரகமான மார்சையும் பாதிக்கிறது.பெரிய துண்டுகள், மிகப் பெரிய பனிக்கட்டி பாளத்திலிருந்து உடைந்து கடலில் விழுகிறது. இனி பனியுகம் ஆரம்பமாகும். வட்ட சுழற்சியில் மூன்று காரணிகளும் ஒன்று சேருகையில் ஏற்படும் அபரிமித வெப்பத்தினால் பனிகள் உருகும்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !