உள்ளூர் செய்திகள்

தக்காளி பூரி!

தேவையான பொருட்கள்:கோதுமை மாவு - 200 கிராம்சேமியா - 50 கிராம்தக்காளி - 50 கிராம்புதினா இலை, பேக்கிங் சோடா - சிறிதளவுமிளகாய் துாள் - 1 தேக்கரண்டிசீரகம் - 1 தேக்கரண்டிஎண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை:தக்காளியை நன்றாக அரைக்கவும். புதினா இலைகளை ஆய்ந்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கோதுமை மாவு, சேமியா, மிளகாய் துாள், உப்பு, புதினா இலை, பேக்கிங் சோடா, சீரகம், தக்காளி விழுது ஆகியவற்றை கலந்து, நன்றாக பிசைந்து கொள்ளவும்.இந்த மாவு கலவையை, சிறு உருண்டைகளாக உருட்டி, பூரியாக வார்க்கவும். கொதிக்கும் எண்ணெயில் அவற்றைப் போட்டு, பொரித்தெடுக்கவும். சுவையான தக்காளி பூரி தயார்!வித்தியாசமான சுவையுடன் இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.- பிரேமா சாந்தாராம், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !