வீ டூ லவ் சிறுவர்மலர்!
என் வயது, 77; சிறுவர்மலர் இதழை தவறாமல் வாசித்து வருகிறேன். அந்த காலத்து மனுஷியாக வாழும் என்னை, இந்த தலைமுறையுடன் நெருக்கமாக்குகிறது. அறிவுடன் பழக வைக்கும் அருஞ்செயலை செய்கிறது. இளையவர்களுடன், எல்லா விஷயங்களிலும் ஈடு கொடுக்க வைக்கிறது. அனைத்து துறைகள் பற்றியும் தெளிவான விவரங்களைத் தருகிறது. எந்த வயதினரும், எளிதாக புரியும் வகையில் அமைந்துள்ளது சிறுவர்மலர். இதயத்தில் ஏற்பட்ட நலக்குறைவால், 'பேஸ் மேக்கர்' என்ற இதய முடுக்கி கருவி பொருத்தி, மூன்றுமுறை சிகிச்சை பெற்றுள்ளேன். சமீபத்தில், என் அன்புத் துணைவரையும் இழந்தேன். இந்த நிலையில், நம்பிக்கையுடன் வாழ்வை எதிர்கொள்ள, பெரிதும் துணை நிற்கிறது சிறுவர்மலர். ஒரு குழந்தையைப் போல படித்து மகிழ்கிறேன். இந்த அளவிடற்கரிய பணியை செய்வதற்காக, கோடான கோடி நன்றியை சமர்ப்பிக்கிறேன்!- என்.லட்சுமிகாந்தம், மதுரை.