உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது 63; சிறுவர்மலர் இதழை பல ஆண்டுகளாக வாசித்து வருகிறேன். படிப்பது மட்டும் இன்றி, அறிவு சார்ந்த கதைகளையும், 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி கடிதங்களையும் தொகுத்து வைத்துள்ளேன். அவற்றை பேரன்களுக்கு அவ்வப்போது கூறி வருகிறேன்.ஒரு பேரன் வயது, 10; இன்னொருவனுக்கு, 4 வயதாகிறது. இருவருக்கும், சிறுவர்மலர் கதைகளை, கண்முன் வருவது போல் எடுத்துக் கூறி, நல்வழி காட்ட முயல்கிறேன். எதிர்காலத்தில் சிறந்த மனிதர்களாக வாழ இது வழி வகுக்கும் என நம்புகிறேன். சிறுவர்மலர் ஒரு ஆனந்த மலராக குடும்பத்தில் மலர்வதால் பெருமைப்படுகிறேன்.பிற்காலத்தில் உதவும் என சிறுவர்மலர் இதழ்களை சேகரித்து வருகிறேன்; தலைமுறைக்கும் அறிவூட்ட உதவும் என நம்புகிறேன். - பத்மா பசுபதி, திருப்பூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !