வீ டூ லவ் சிறுவர்மலர்!
என் வயது, 76; வட்டார வளர்ச்சி அதிகாரியாக பணிபுரிந்து, ஓய்வு பெற்றேன். சிறுவர்மலர் இதழை நீண்ட காலமாக படித்து வருகிறேன். கதைகளை ரசித்து படித்து, முறையாக தொகுத்து வைத்துள்ளேன். என் வீட்டருகே வசிக்கும் சிறுவர்கள், அதை வாங்கி படித்து மகிழ்கின்றனர்.என் மனைவி ஆசிரியையாக பணியாற்றிய போது, வகுப்பில் பாடங்களை கற்பிக்க நான் தொகுத்து வைத்திருந்த புத்தகத்தை கூடுதலாக பயன்படுத்தி வந்தார். இது மாணவ, மாணவியரிடம் நற்பெயரை பெற்றுத்தந்தது. ஓய்வு பெற்றதும், பள்ளி நுாலகத்திற்கு, அந்த தொகுப்புகளை அன்பளிப்பாக வழங்கினார்.தற்போது, என் பேரப்பிள்ளைகளுக்கு கதைகளை எடுத்துக் கூறி மகிழ்கிறேன். சிறுவர்மலர் இதழுக்கு, நீண்ட கால வாசகனாக இருப்பது பெருமிதம் தருகிறது. - சு.ஹரிகிருஷ்ணன், திருநெல்வேலி