உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது, 80; இல்லத்தரசியாக இருக்கிறேன். பள்ளி மாணவ, மாணவியருக்கு டியூஷனும் கற்றுத் தருகிறேன். சில ஆண்டுகளுக்கு முன், உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். அப்போது, பக்கத்து படுக்கையிலிருந்தவர், சிறுவர்மலர் இதழை அறிமுகம் செய்து படிக்க தந்தார். அது சுவையாக இருந்ததால் வீடு திரும்பியதும், தினமலர் நாளிதழ் வாங்க ஆரம்பித்தேன். என் கணவருக்கும் பிடித்த ஒன்றாகி விட்டது சிறுவர்மலர். எதை எடுப்பது, எதை விடுப்பது என அத்தனை பக்கங்களும் அமுதம். உடன் படித்தவர் எழுதிய கடிதம், 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதியில் உள்ளதா என ஒவ்வொரு வாரமும் தேடுகிறேன்; ஆர்வம் பொங்க படிக்கிறேன். அறிவை தீட்டுகிறது புதிர் பகுதி. தமாசுகளின் கூடாரமாக இருக்கும், 'மொக்க ஜோக்ஸ்' படித்து சிரித்து மகிழ்கிறோம். பட்டூஸ்க்கு மட்டுமின்றி, எங்களுக்கும் நற்சிந்தனையை தருகின்றன சிறுகதைகள். அனைத்துக்கும் சிகரமாக, 'இளஸ்... மனஸ்...' அறிவுரை மனதை கொள்ளை கொண்டுள்ளது. என்னிடம் படிக்கும் மாணவியர் குறைகளை நிவர்த்தி செய்ய உதவுகிறது. சிறுவர்மலர் என்றும் பிரகாசிக்க வாழ்த்துகிறேன்.- சுகந்தாராம், சென்னை.தொடர்புக்கு: 90808 20380


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !