வீ டூ லவ் சிறுவர்மலர்!
என் வயது 23. எம்.காம்., முதுகலை பட்டதாரி. நான் குழந்தையாக இருந்த போது, சற்று பேச்சுத்திறன் குறைபாடு இருந்தது. சிறுவர்மலர் இதழில் வரும், படக்கதை, சிறுகதைகள், தொடர்கதை, கட்டுரைகளை, இப்போதும் வாய்விட்டு படிப்பேன். தற்போது, நான் நன்றாக பேசுவதற்கு காரணம், சிறுவர்மலர் தந்த வாசிப்பு பழக்கம் தான். இந்த அறிவுமலர் அளித்த தன்னம்பிக்கை தான், என்னுள் இருந்த பேச்சு குறைபாடு என்ற தாழ்வு மனப்பான்மையை தகர்தெறிந்தது. 'மொக்க ஜோக்ஸ்!' பகுதி வாய்விட்டு சிரிக்க வைக்கிறது. 'இளஸ் மனஸ்!' பகுதி, தன்னம்பிக்கையை தட்டி எழுப்புகிறது. எத்தனை இணைப்பு மலர்கள் அணிவகுத்து நின்றாலும், அத்தனையையும் புறம் தள்ளி, புதுமை படைக்கும் அறிவு மலராக, சிறுவர்மலர் திகழ்கிறது. அதன் சீரிய பணிகள் சிறந்தோங்க வாழ்த்துகள். - எஸ்.ஆர்.தமிழ்ச்செல்வம், விருதுநகர்.