வீ டூ லவ் சிறுவர்மலர்!
என் வயது, 21. பி.பார்ம்., நான்காம் ஆண்டு படிக்கிறேன். எங்கள் வீட்டில் அனைவரும், 'தினமலர்' வாசகர்கள். அதன் இணைப்பு மலர்களாக மலரும் சிறுவர்மலர், வாரமலர், ஆன்மிக மலர் ஆகியவை, எங்கள் குடும்பத்துடன் பின்னிப் பிணைந்தவை. என் தந்தை, அண்ணன் ஆகியோர் எழுதியவை, இணைப்பு இதழ்களில் பிரசுரமாகி, பரிசுகளும் பெற்றுள்ளன. சிறு வயது முதல் சிறுவர்மலர் இதழ் மீது ஆழமான பற்று கொண்டு, படித்து வருகிறேன். படக்கதை, மொக்க ஜோக்ஸ், சிறுகதைகள் போன்றவை மிகவும் பிடிக்கும். புதிர் மற்றும் பொது அறிவு விஷயங்கள் அருமை. 'மம்மீஸ் ஹெல்தி கிச்சன்!' பகுதியில் வரும் சமையலை செய்து, குடும்பத்தினருக்கும் கொடுத்து, சுவைப்பேன். சிறுவர்கள் மட்டுமின்றி, பெரியவர்களும் படித்து மகிழும் வகையில் உள்ள சிறுவர்மலர் இதழுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். - ஆர்.ரக்சனா சக்தி, சென்னை. தொடர்புக்கு: 82487 17528