உனக்கு என்ன தைரியம்?
ஜெர்மன் நாட்டின் 'இரும்பு மனிதர்' என்று போற்றப்படுபவர் பிஸ்மார்க். அவர் மிகவும் கட்டுப்பாடானவர். அவர் சொன்னால் சொன்னதுதான். அதற்கு அப்பீலே கிடையாது. நெருப்பாக விளங்கிய அவரை எவரும் ஏமாற்ற முடியாது.உலகில் புகழ்பெற்ற தலைவர்கள், அறிஞர்களின் கையெழுத்துக்களைச் சேகரிக்கும் ஆர்வம் கொண்ட ஒரு பெண்மணி பிஸ்மார்க்கின் கையெழுத்தையும் பெற விரும்பி அவருக்குக் கடிதம் எழுதினார். கடிதத்தைப் படித்த பிஸ்மார்க்கிற்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.தன்னிடமே கையெழுத்து கேட்ட பெண்மணிக்கு உடனடியாக, 'நான் யாருக்கும் என் கையெழுத்தை அனுப்ப மாட்டேன். என்னிடம் கையெழுத்து கேட்க உனக்கு எவ்வளவு தைரியம்?' என்று வேக வேகமாக பதில் எழுதி, பழக்கதோஷத்தில் கையெழுத் தையும் அவசர அவசரமாக கீழே போட்டு பதில் அனுப்பி விட்டார்.சூப்பர் இல்ல.....