உள்ளூர் செய்திகள்

டிசம்பர் - 2013

தமிழகம்

டிச., 4: டெபாசிட் பெற்ற தி.மு.க.,: ஏற்காடு எம்.எல்.ஏ., பெருமாள் மறைவை அடுத்து, அங்கு டிச., 4ல் இடைத்தேர்தல் நடந்தது. அ.தி.மு.க., சார்பில் பெருமாள் மனைவி சரோஜா - தி.மு.க., சார்பில் மாறன் போட்டியிட்டனர். இதில் 78,116 ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க.வின் சரோஜா வெற்றி பெற்றார். தி.மு.க., டெபாசிட் பெற்றது. அ.தி.மு.க., ஆட்சியில் இது 4வது இடைத்தேர்தல்.டிச., 5: ஜப்பான் மன்னர் அஹிட்டா, ராணி மெஸிகோ ஆகியோர் சென்னை வந்தனர். அவர்களை சிறப்பிக்கும் விதமாக சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது. டிச., 9: தமிழக அமைச்சரவை 13வது முறையாக மாற்றம். அமைச்சராக இருந்த கே.வி.ராமலிங்கம் நீக்கப்பட்டு, புதிய அமைச்சராக ஆர்.பி.உதயகுமார் பொறுப்பேற்பு. இவர் ஏற்கனவே அமைச்சராக இருந்து நீக்கப்பட்டவர். டிச., 10: நான்கு முறை அமைச்சர், 7 முறை எம்.ஏல்.ஏ.,வாக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன், அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். தே.மு.தி.க., ஆலந்தூர் தொகுதி எம்.எல்.ஏ., வாக இருந்தார். எம்.எல்.ஏ., மற்றும் கட்சிப்பதவி என அனைத்தையும் ராஜினாமா செய்தார். டிச., 11: தமிழக அனைத்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் பங்கேற்கும் 3 நாள் மாநாடு முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்தது. டிச., 12: ஆஸ்திரேலிய ஆயில் நிறுவனம், இந்தியாவில் தொடங்குவதற்கு பரிந்துரை வழங்குவதற்காக, 11 எம்.பி.,க்கள் லஞ்சம் கேட்டதாக, 'கோப்ரா போஸ்ட்' இணையதளம் செய்தி வெளியிட்டது. இதில் 2 பேர் அ.தி.மு.க., எம்.பி.,க்கள். டிச., 20: 2013ம் ஆண்டுக்கான 'சாகித்ய அகாடமி' விருது அறிவிப்பு. தமிழில் 'கொற்கை' என்ற புதினத்தை எழுதியதற்காக ஜோ.டி.குரூஸ்க்கு விருது. டிச., 21: தனிப்பொறுப்புடன் கூடிய மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சராக இருந்த, ஜெயந்தி நடராஜன் ராஜினாமா. அவரது துறை பெட்ரோலிய துறை அமைச்சர் வீரப்ப மொய்லியிடம் ஒப்படைப்பு. * தூத்துக்குடி துறைமுகத்தில், 1999 முதல் பணியில் இருந்த கடலோர காவல்படையின் 'அகல்யாபாய்' கப்பல், ஓய்வு பெற்றது. புதிய கப்பல் 'ஆதேஷ்' பணியை துவக்கியது.

இந்தியா

டிச., 10: பாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.கங்குலி, மேற்கு வங்க மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என கோரிக்கை. டிச., 13: மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், ஜாமினில் வெளிவந்தார். * முன்னாள் உள்துறை செயலர் ஆர்.கே. சிங்., பா.ஜ., கட்சியில் இணைந்தார். * நாடு முழுவதும் வங்கி சேமிப்பு கணக்குகளில், வாடிக்கையாளர்களின் உரிமை கோரப்படாத பணம் 3,652 கோடி ரூபாய் உள்ளதாக நிதியமைச்சகம் தகவல். டிச., 14: மிசோரம் சட்டசபை தேர்தலில் காங்., மீண்டும் வெற்றி. முதல்வராக தொடர்ந்து 2வது முறையாக லால் தன்ஹவ்லா பதவியேற்பு. இவர் 5வது முறையாக மிசோரம் முதல்வராகியுள்ளார்.* இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனியின், மூத்த சகோதரர் நரேந்திர சிங் தோனி, சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார். * என்.டி.டி.வி., சேனலின் 25வது ஆண்டு விழாவை முன்னிட்டு, 'இந்தியாவின் 25 சிறந்த சாதனையாளர்கள்' பட்டியல் வெளியீடு. சச்சின், அமிதாப், ஷாருக்கான், ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி உள்ளிட்ட 25 பேர் விருது பெற்றனர். டிச., 15: சர்தார் வல்லபாய் படேல் நினைவு தினத்தை முன்னிட்டு, பா.ஜ., சார்பில், 'ஒற்றுமை ஓட்டம்' நடந்தது. * மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சராக இருந்த சிஸ் ராம் ஓலா மறைவைத் தொடர்ந்து, அவரது துறை, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ்க்கு ஒதுக்கீடு. டிச., 18: சம்பள உயர்வு, வங்கிகளை ஒருங்கிணைப்பதற்கு எதிர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து வங்கி ஊழியர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம். டிச.,20: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் சூப்பர்சானிக் விமானம் 'தேஜஸ்', 2வது முதல் கட்ட சோதனை பெங்களூருவில் வெற்றிகரமாக நடந்தது. * ஐ.நா., அமைதிக் குழுவில் பணியாற்றிய 2 பேர், தெற்கு சூடானில் கொல்லப்பட்டனர். ஒருவர் காயம். * மீண்டும் நானே வந்தேன்: ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் பா.ஜ., ஆட்சியை பிடித்தது. முதல்வர்களாக ரமன் சிங், சவுகான், வசுந்தரா ராஜே ஆகியோர் பதவியேற்றனர்.

உலகம்

டிச., 8: சிங்கப்பூரில் கலவரம்: டிச., 8ம் தேதி, சிங்கப்பூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் 'லிட்டில் இந்தியா' பகுதியில், புதுக்கோட்டையை சேர்ந்த இளைஞர் பஸ் விபத்தில் பலியானார். இதைப்பார்த்த தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது கலவரமாக மாறியது. ஆம்புலன்ஸ், போலீஸ் வாகனங்கள் தீ வைக்கப்பட்டன. இச்சம்பவத்தில் ஈடுபட்ட தாக 24 தமிழர்கள் உள்பட 27 பேர் கைது செய்யப்பட்டனர். 52 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.டிச., 9: தாய்லாந்து பிரதமர் யிங்லக் ஷின்வத்ரா பதவி விலகக்கோரி, எதிர்க்கட்சிகள் போராட்டம். இதையடுத்து அந்நாட்டு பார்லிமென்ட் கலைக்கப்படுவதாக பிரதமர் அறிவிப்பு. ஆனால் பிப்., தேர்தல் நடக்கும் வரை பிரதமராக தொடர்வார் எனவும் அறிவிப்பு. டிச., 10: தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் இறுதி அஞ்சலி, ஜோகனஸ்பர்க் கால்பந்து மைதானத்தில் நடந்தது. அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். டிச., 12: வங்கதேசத்தில் 1971ல் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போரில், பாக்., ராணுவத்துடன் சேர்ந்து, இனப்படுகொலை செய்த ஜாமத்-இ-இஸ்லாமி கட்சி தலைவர் அப்துல் காதர் முல்லா தூக்கிலிடப்பட்டார்.* மாறாத அமெரிக்கா: அமெரிக்காவுக்கான இந்திய துணைத்தூதராக இருந்தவர் தேவ்யானி கோப்ரகடே. இவர் தனது வீட்டு பணிப்பெண்ணுக்கு விசா பெற்றதில் முறைகேடு, மற்றும் அவருக்கு உரிய சம்பளம் வழங்காதது ஆகிய குற்றங்களுக்காக, டிச,. 12ம் தேதி, தூதரக அதிகாரி என்று கூட பார்க்காமல், பொது இடத்திலேயே கைது செய்யப்பட்டார். இச்சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இந்தியா வந்த அமெரிக்க எம்.பி.,க்கள் குழுவை சந்திக்க மறுத்தது. மேலும் தேவ்யானியை, ஐ.நா., வுக்கான அதிகாரியாக மாற்றியது. டிச., 22: உலகின் முதல் செயற்கை இருதய மாற்று அறுவை சிகிச்சை, பாரிசில் வெற்றிகரமாக நடந்தது.

'நியூஸ் ரேங்க்'

1. ஊழல் ஒழியுமா! : ஊழலில் ஈடுபடும் அரசியல்வாதிகள், அதிகாரிகளை தண்டிக்க வகை செய்யும் 'லோக்பால்' சட்ட மசோதா பார்லிமென்டில் டிச., 16ல் நிறைவேற்றம். இதையடுத்து 6 நாட்களாக இதற்காக உண்ணா விரதமிருந்த அன்னா ஹசாரே அதனை முடித்துக் கொண்டார்.2. ஓரினச் சேர்க்கை குற்றமா! : இந்தியாவில் 'ஓரினச்சேர்க்கை திருமணங்கள்' 377வது சட்டப்பிரிவின் படி குற்றம்; மீறினால் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படும் என டிச., 11ல், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு. 2009ல் டில்லி ஐகோர்ட் அனுமதி வழங்கியிருந்தது.3. விண்வெளி போட்டியில் : நிலவுக்கு சீனா அனுப்பிய 'சாங்கி - 3' விண்கலம், டிச., 16ல், வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. இந்த விண்கலத்தோடு 'யுடு' என்ற ரோபோவும் அனுப்பப்பட்டது. இரண்டும் தனித்தனியாக பிரிந்து ஆய்வு மேற்கொள்கிறது.

விளையாட்டு

டிச., 3: ஐ.சி.சி., வழங்கும் 'மக்களின் மனம் கவர்ந்த வீரர்' விருது, இந்திய அணி கேப்டன் தோனிக்கு கிடைத்தது.டிச., 5: வரும் 2017, 'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடரை (17 வயது) நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்தது.டிச., 7: சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின், புதிய விதிகளை ஏற்க, இந்திய ஒலிம்பிக் சங்கம் முன்வந்தது.டிச., 9: இந்திய அணிக்கு புதிய 'ஸ்பான் சராக' ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தேர்வானது.டிச., 13: ஐ.சி.சி.,யின் சிறந்த 'வளர்ந்து வரும் வீரருக்கான' விருதை இந்திய அணியின் புஜாரா தட்டிச் சென்றார். டிச., 14: இந்திய ஆண்கள் 'சர்கிள்' கபடி அணி, தொடர்ந்து நான்காவது முறையாக உலக கோப்பை வென்றது. டிச., 17: இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரை, 3-0 என, ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.டிச., 20: நடப்பு ஆண்டின் சிறந்த இந்திய கால்பந்து வீரருக்கான விருதுக்கு, கேப்டன் சுனில் செத்ரி தேர்வானார்.டிச., 22: இங்கிலாந்து அணியின் 'சுழல்' ஜாம்பவான் சுவான், கிரிக்கெட் அரங்கில் இருந்து திடீரென விடைபெற்றார்.டிச., 23: தேசிய பாட்மின்டன் தொடரில் சிந்து, ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றனர். டிச., 25: தென் ஆப்ரிக்க அணியின் 'ஆல் ரவுண்டர்' காலிஸ், டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்தார்.

'நியூஸ் ரேங்க்'

வெற்றிக் கேப்டன்: பிப். 24: சென்னையில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் இரட்டை சதம் அடித்த கேப்டன் தோனி, இரட்டை சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனை படைத்தார்.சூப்பர் ஜோடி: ஜன. 5: பிரிஸ்பேன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, அமெரிக்காவின் மேடெக் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.ஹாக்கியில் கலக்கல்: மார்ச் 12: மலேசியாவில் நடந்த அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி லீக் போட்டியில், இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை தோற்கடித்தது.தங்க நாயகன்: மாஸ்கோவில் நடந்த உலக தடகள 100 மீ., ஓட்டத்தில் 'மின்னல் மனிதன்' ஜமைக்காவின் உசைன் போல்ட், 9.77 வினாடிகளில் இலக்கை எட்டி (ஆக.11) தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.கடைசி தங்கம்: மாஸ்கோவில் நடந்த உலக தடகள போட்டியின் 'போல் வால்ட்' பிரிவில் தங்கம் (4.89 மீ.,) வென்ற (ஆக. 13) ரஷ்யாவின் எலினா இசின்பெயாவா, சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.'கால்பந்து கடவுள்': உலக ரசிகர்களால் அதிகம் நேசிக்கப்பட்ட இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் பெக்காம், (மே 16) சர்வதேச கால்பந்து அரங்கிலிருந்து பிரியாவிடை பெற்றார்.இரண்டு கோப்பை: சச்சின் பங்கேற்ற கடைசி 'டுவென்டி-20' தொடர் சாம்பியன்ஸ் லீக். இதில் ரோகித் சர்மா தலைமையில் அசத்திய மும்பை அணி (அக்., 6), இத்தொடரில் இரண்டாவது முறையாக (2011, 2013) கோப்பை வென்றது.சபாஷ் மேத்தா: டில்லியில் நடந்த இந்தியன் ஓபன் ஸ்னூக்கர் தொடரின் பைனலுக்கு (அக்., 19) முன்னேறினார் இந்தியாவின் ஆதித்யா மேத்தா. 'ரேங்கிங்' அந்தஸ்து பெற்ற தொடரின் பைனலுக்கு முன்னேறிய முதல் இந்திய வீரரானார். 'டாப் ஸ்கோரர்': இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் செத்ரி.நேபாளத்துக்கு எதிரான 'நட்பு' போட்டியில் (நவ., 20), கோல் அடித்த இவர், சர்வதேச போட்டிகளில் அதிக கோல் (43) அடித்த இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !