ஜனவரிஉலகம்ஜன., 12: வங்கதேச பிரதமராக 3வது முறையாக ஷேக் ஹசினா தேர்வு செய்யப்பட்டார். இந்தியாஜன., 5: உள்நாட்டில் தயாரிக்கப்பட்டகிரையோஜெனிக் இன்ஜின் மூலம், ஜி.எஸ்.எல்.வி., டி5 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஜன., 25: நாட்டில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் உயரிய 'பத்ம' விருதுகள் அறிவிப்பு. 127 பேர் தேர்வு. இதில் 27 பேர் பெண்கள். ஜன., 31: உத்தரகண்ட் முதல்வராக இருந்த விஜய் பகுகுணா பதவி விலகியதைத் தொடர்ந்து, புதிய முதல்வராக ஹரிஸ் ராவத்பதவியேற்பு. தமிழகம்ஜன., 26: அந்தமானில் வைப்பர் தீவு அருகே கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 32 பேர் பலி. அனைவரும் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர்கள்.
பிப்ரவரிஉலகம்பிப்., 11: நேபாளத்தின் புதிய பிரதமராக சுஷில்குமார் கொய்ராலா பதவியேற்பு. இந்தியாபிப். 1: இந்தியாவில் முதன்முறையாக மும்பையில் 'மோனோ' ரயில் அறிமுகம். தமிழகம்பிப்., 19: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் மரண தண்டனை பெற்றுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளனுக்கு ஆயுள் தண்டனையாக குறைத்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.
மார்ச்உலகம்மார்ச் 8: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நகரத்துக்கு சென்ற எம்.எச்., 370 விமானம் நடுக்கடலில் சென்ற போது மாயமானது. இன்றுவரை இதைக்கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தியாமார்ச் 5: 16வது லோக்சபா தேர்தல் 9 கட்டங்களாக (ஏப்., 7 முதல் மே 12 வரை) நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு.தமிழகம்மார்ச்., 25: தி.மு.க., வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து, மு.க.அழகிரி நீக்கம்.
ஏப்ரல்
இந்தியாஏப்., 15: திருநங்கைகளை சுப்ரீம் கோர்ட் மூன்றாவது பாலினமாக அறிவித்தது. ஏப்., 27: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக ராஜேந்திர மால் லோதா பதவியேற்பு.தமிழகம்ஏப்., 24: தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது.
மேஉலகம்மே 3: ஆப்கானிஸ்தானின் படகஸ்தான் மாகாணத்தில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி 2000 பேர் பலி.இந்தியாமே 2: அசாமின் போடோலாந்து பகுதியில், இரு பிரிவினருக்கு இடையே நடந்தசண்டையில் 30 பேர் பலி. மே 16: லோக்சபா தேர்தலில் 285 தொகுதிகளை பா.ஜ., கைப்பற்றி தனிப்பெரும்பான்மை பெற்றது.தமிழகம்மே 1: சென்னை சென்ட்ரலில்பெங்களூரு - கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்தது. ஆந்திராவைச் சேர்ந்த பெண் பலி.மே 7: ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு மே 16: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளில் 37 தொகுதிகளை அ.தி.மு.க., கைப்பற்றியது.
ஜூன்
உலகம்ஜூன் 3: நேபாளத்தின் மேற்கு பகுதியில் கோயிலுக்கு இந்திய பக்தர்கள் சென்ற பஸ் கவிழ்ந்து 18 பேர் பலி. ஜூன் 8: பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் பயங்கரவாதிகள் நடத்தியதாக்குதலில், 27 பேர் பலி. இந்தியாஜூன் 2: ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் அதிகாரப்பூர்வமாக உதயம். முதல்வராக தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவர் சந்திர சேகர ராவ் பதவியேற்பு.ஜூன் 6: லோக்சபா சபாநாயகராக ம.பி.,யை சேர்ந்த பெண் எம்.பி., சுமித்ரா மகாஜன் தேர்வு. ஜூன் 14: ஐ.என்.எஸ்., விக்ரமாதித்யா போர்க்கப்பலை, பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். ஜூன் 20: பயணிகள் ரயில் கட்டணம் 14.2 சதவீதமும், சரக்கு ரயில் கட்டணம் 6.5 சதவீதமும் உயர்த்தப்பட்டன. ஜூன் 21: சென்ற ஆண்டுக்கான ஞானபீட விருது, இந்தி எழுத்தாளர் கேதர்நாத் சிங்கிற்கு வழங்கப்பட்டது. ஜூன் 30: நான்கு வெளிநாடுகளைச் சேர்ந்த 5 செயற்கைக்கோள்களுடன், பி.எஸ்.எல்.வி.,- சி23 ராக்கெட் ஏவப்பட்டது. தமிழகம்ஜூன் 29: சென்னை மவுலிவாக்கத்தில், கட்டப்பட்டு வந்த 11 அடுக்கு மாடிக்கட்டடம் இடிந்து விழுந்ததில் சிக்கி 61 பேர் பலி. 27 பேர் காயங்களுடன் மீட்பு. ஜூலை 5ம் தேதி மீட்பு பணி நிறைவடைந்தது.
ஜூலைஉலகம்ஜூலை 10: இஸ்ரேல் ராணுவம், பாலஸ்தீனம் மீது ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. 300 பேர் பலி. ஜூலை 15: 'பிரிக்ஸ்' கூட்டமைப்பின் ஆறாவது மாநாடு, பிரேசிலின் பிரேசிலா நகரில் நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். ஜூலை 17: நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து, மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு சென்ற போயிங் 777 விமானம், உக்ரைன் கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது. 295 பேர் பலி. ஜூலை 23: தைவானின் பெங்கு தீவில் டிரான்ஸ் ஆசியா விமானம் விபத்துக்குள்ளானதில் 51 பேர் பலி.இந்தியாஜூலை 4: பிரதமர் நரேந்திர மோடி, காஷ்மீரில் அமைக்கப்பட்டிருந்த உதம்பூர் - கத்ரா இடையிலான புதிய ரயில் பாதையை துவக்கினார். இதன் மூலம் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு நேரடியாக ரயிலில் செல்லலாம்.ஜூலை 5: ஈராக் உள்நாட்டு போரில், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளிடம் சிக்கிக்கொண்ட ஒரு தமிழக நர்ஸ் உள்பட 46 இந்திய நர்ஸ்கள் பத்திரமாக மீட்பு. ஜூலை 9: பா.ஜ., தேசிய தலைவராக அமித் ஷா பொறுப்பேற்பு. ஜூலை 31: இந்திய ராணுவ தலைமை தளபதியாக இருந்த பிக்ரம் சிங் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, 26வது தலைமை தளபதியாக தல்பீர் சிங் பொறுப்பேற்பு. தமிழகம்ஜூலை 26: சென்னை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சய் கிஷன் கவுல் பதவியேற்றார்.ஜூலை 30: 94 குழந்தைகள் பலியான கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில், பள்ளி நிறுவனர் பழனிச்சாமி, அவரது மனைவிசரஸ்வதி உள்ளிட்ட 10 பேருக்கு சிறை தண்டனை. 11 பேர் விடுதலை.
ஆகஸ்ட்உலகம்ஆக., 3: தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தில் நிலநடுக்கம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 150 பேர் பலி. ஆக., 8: மேற்கு ஆப்ரிக்க நாடுகளான கென்யா, லைபீரியா, சியோரா லியோன், நைஜீரியா ஆகிய நாடுகளில் 'எபோலா' வைரஸ் தாக்கியது. 8 ஆயிரம் பேர் பலி. இந்தியாஆக., 16: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'ஐ.என்.எஸ்.,கோல்கட்டா' ஏவுகணை தாங்கி கப்பலை, பிரதமர் மோடி அர்ப்பணித்தார். ஆக., 19: 55 எம்.பி.,க்களை பெறாததால், காங், கட்சிக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்க முடியாது என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவிப்பு. ஆக., 28: நாட்டு மக்கள் அனைவருக்கும் வங்கி கணக்கு வசதி கிடைக்கும் நோக்கில், 'ஜன் தன் யோஜனா' திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. கணக்கு தொடங்குவோருக்கு 1 லட்ச ரூபாய் விபத்து காப்பீடு வழங்கப்படும். தமிழகம்ஆக., 12: லோக்சபா துணை சபாநாயகராக அ.தி.மு.க., வின் தம்பிதுரை தேர்வு.ஆக., 16: பா.ஜ., தலைவராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சரானதைத் தொடர்ந்து, புதிய தலைவராக தமிழிசை சவுந்திரராஜன் தேர்வு.ஆக., 22: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136லிருந்து உயர்த்தி 142அடியாக தேக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு.
செப்டம்பர்
உலகம்செப்., 19: இங்கிலாந்தில் இருந்து தனி நாடாக பிரிவதற்கு, ஸ்காட்லாந்து மக்களிடம் தேர்தல் நடத்தப்பட்டது. பெரும்பான்மை மக்கள் இங்கிலாந்துடன் இருப்பதற்கே வாக்களித்தனர். செப்., 21: நியூசிலாந்தின் பிரதமராக மூன்றாவது முறையாக ஜான் கேய் நியமனம். இந்தியாசெப்., 1: உலகின் பழமையான நாளந்தா பல்கலைக்கழகம், 800 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் திறப்பு. செப்., 2: காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்டு 300க்கும் மேற்பட்ட மக்கள் பலி.செப்., 5: ஆசிரியர் தினத்தன்று பிரதமர் மோடி, நாடு முழுவதும் உள்ள பள்ளிக்குழந்தைகளுடன் 'டிவி'யில் நேரடியாக கலந்துரையாடினார். செப்., 17: சீன அதிபர் ஜி ஜின்பிங் மூன்று நாள் பயணமாக இந்தியா வந்தார். இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்து. செப்., 18: தேசிய மகளிர் ஆணைய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த லலிதா குமாரமங்கலம் நியமனம். செப்., 24: இஸ்ரோ 2013 நவ., 5ல் செவ்வாய்க்கு அனுப்பிய 'மங்கள்யான்' விண்கலம் செவ்வாய் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது. செப்., 26: பிரதமர் மோடி 5 நாள் பயணமாக அமெரிக்கா சென்றார். அதிபர் ஒபாமாவுடன் சந்திப்பு.செப்., 28: சுப்ரீம் கோர்ட் புதிய தலைமை நீதிபதியாக எச்.எல்.தத்து பொறுப்பேற்பு. இவர் 42வது தலைமை நீதிபதி. தமிழகம்செப்., 27: சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டு சிறை மற்றும் 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் 4 ஆண்டு சிறை. 3 பேருக்கும் தலா 10 கோடி ரூபாய் அபராதம்.செப்., 29: தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்பு.
அக்டோபர்
உலகம்அக்., 27: பிரேசிலின் புதிய அதிபராக டில்மா ரூசெல்ப் மீண்டும் தேர்வு. இந்தியாஅக்., 2: மகாத்மா காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு தூய்மைப்படுத்தும் திட்டத்தை (ஸ்வாச் பாரத்) பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அக்., 3: பாட்னாவில் நடந்த தசரா விழா கூட்ட நெரிசலில் 32 பேர் பலி. அக்., 12: ஆந்திராவின் விசாகப்பட்டினத்தை 'ஹூட் ஹூட்' புயல் மணிக்கு 195 கி.மீ., வேகத்தில் தாக்கியது. அக்., 16: இந்தியாவுக்கு தனி ஜி.பி.எஸ்., வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்ட 7 செயற்கைக்கோள்களில், 3வது செயற்கைக்கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., 1சி வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.அக்., 23: இந்திய -- பாக்., எல்லையில் உள்ள சியாச்சின் மலைப்பகுதியில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார் மோடி. அக்., 29: வெளிநாடுகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் 627 பேரின் பட்டியலை மத்திய அரசு சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்தது. தமிழகம்அக்., 17: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவு. அக்., 30: ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தை சேர்ந்த 5 மீனவர்களுக்கு இலங்கை ஐகோர்ட் மரண தண்டனை விதித்தது. 2011ல் போதைப்பொருள் வழக்கில் கைதானவர்கள். மத்திய, மாநில அரசுகளின் எதிர்ப்பை தொடர்ந்து இவர்கள் விடுதலை.
நவம்பர்
உலகம்நவ., 3: அமெரிக்காவின் இரட்டை கோபுரம் 2011 செப்., 11ல் அல்குவைதா பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்ட இடத்தில் மீண்டும் வணிக கோபுரம் திறக்கப்பட்டது. இந்தியாநவ., 5: டில்லி சட்டசபையை கலைத்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உத்தரவு. ஜனாதிபதி ஆட்சி அமல். நவ., 9: மத்திய அமைச்சரவையில் 21 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்பு. மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை 65 ஆனது. தமிழகம்நவ., 2: காங்., கட்சியின் புதிய தலைவராக இளங்கோவன் பொறுப்பேற்பு. நவ., 3: கிரானைடு முறைகேடு குறித்து விசாரணை நடத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் குழுவுக்கு தமிழக அரசு அனுமதி. நவ., 28: காங்., கட்சியில் இருந்து விலகிய வாசன், 'தமிழ் மாநில காங்கிரஸ்' கட்சியை மீண்டும் தொடங்கினார்.
டிசம்பர்உலகம்டிச., 17: பாகிஸ்தானின் பெஷாவர் ராணுவப்பள்ளியில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 140 மாணவர்கள் பலி.டிச., 18: அமெரிக்கா -- கியூபா இடையே 50 ஆண்டுகளாக இருந்த பகைமை முடிவுக்கு வந்தது. இந்தியாடிச., 3: சி.பி.ஐ., புதிய இயக்குநராக அனில் சின்ஹா நியமனம். டிச., 10: அமைதிக்கான நோபல் பரிசு, இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தான் சிறுமி மலாலாவுக்கு இணைந்து வழங்கப்பட்டது. டிச., 18: எடைமிகுந்த செயற்கைக்கோள்களை தாங்கி செல்லும் வகையிலான, ஜி.எஸ்.எல்.வி., மார்க் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. டிச., 21: காஷ்மீர் சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை. பி.டி.பி., 28 , பா.ஜ., 25, தேசிய மாநாட்டு கட்சி 15, காங்., 12 தொகுதிகளில் வெற்றி பெற்றன. டிச., 23: அசாமில் போடா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பொதுமக்கள் பலி. டிச., 24: சுதந்திர போராட்ட வீரர் மதன் மோகன் மாளவியா மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகிய இருவருக்கும் பாரத ரத்னா விருது அறிவிப்பு. டிச., 28: ஜார்க்கண்ட் தேர்தலில் பா.ஜ., வெற்றி. முதல்வராக ரகுபர் தாஸ் பதவியேற்பு. தமிழகம் டிச., 19: 2014 தமிழ் மொழிக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு பூமணி தேர்வு. இவர் எழுதிய அஞ்ஞாடி நாவலுக்கு பரிசு.