உள்ளூர் செய்திகள்

ஆகஸ்ட் - செப்டம்பர்

தமிழகம்ஆக. 2: தமிழக சட்டசபை நுாற்றாண்டு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு. ஆக. 9: தமிழகத்தின் கடன் சுமை ரூ. 5.70 லட்சம் கோடி என நிதியமைச்சர் தியாகராஜன் வெள்ளை அறிக்கை வெளியீடு. ஆக. 13: தமிழகத்தில் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல். ஆக. 14: தமிழகத்தில் வேளாண் பட்ஜெட் தாக்கல். புதிய கவர்னர்: செப். 18: தமிழக கவர்னராக பீஹாரை சேர்ந்த ஆர்.என்.ரவி பதவியேற்பு. மத்திய உளவுத்துறை சிறப்பு இயக்குநராக இருந்தவர். ஆக. 24: தாம்பரம், காஞ்சி புரம், கடலுார், கும்பகோணம், கரூர், சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்வு.* ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும்.ஆக. 26: இன்ஜினியரிங் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதா சட்டசபையில் நிறைவேறியது. செப். 2: ஜல்லிக்கட்டில் நாட்டு இன மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. செப். 10: பாரதியார் நினைவு தினம்(செப்.11) 'மகாகவி நாளாக' கடைபிடிக்கப்படும் என அரசு அறிவிப்பு. செப். 12: தமிழகத்தில் ஒரே நாளில் 28.9 லட்சம் கொரோனா தடுப்பூசி 'டோஸ்' செலுத்தி சாதனை. செப். 12: குஜராத் முதல்வராக புபேந்திர படேல் (பா.ஜ.,) பதவியேற்பு. செப். 13: அரசு பணியில் பெண்கள் இடஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்வு. செப். 20: பஞ்சாப் முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி (காங்.,) பதவியேற்பு. இந்தியாசாதனை சாலை:ஆக. 4: கிழக்கு லடாக்கில் உள்ள உலகின் உயரமான (19,300 அடி) உம்லிங்லா கணவாய் பகுதியில் சாலை அமைத்து இந்தியா சாதனை.ஆக. 4: உள்நாட்டில் தயாரான முதல் விமானம் தாங்கி போர் கப்பல் 'ஐ.என்.எஸ். விக்ராந்த்' சோதனை ஓட்டம் வெற்றி. ஆக. 7: அமெரிக்காவின் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி. ஆக. 11: ஓ.பி.சி., பட்டியலில் இடம் பெறும் ஜாதிகளை முடிவு செய்ய மாநிலங்களுக்கு அதிகாரம்.உலக சாதனை: செப். 17: இந்தியாவில் ஒரே நாளில் 2.50 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி உலக சாதனை. சீனா 2.47 கோடி தடுப்பூசி செலுத்தி இருந்தது.ஆக. 18: தேசிய பாதுகாப்பு அகாடமி நுழைவு தேர்வு எழுத பெண்களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி. ஆக. 22: நாட்டின் பெரிய மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம்(25 மெகாவாட்) விசாகபட்டினத்தில் துவக்கம்.ஆக. 23 : டில்லியில் காற்றை சுத்தம் செய்யும் புகை கோபுரம் திறப்பு. ஆக. 24: மஹராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவை அவதுாறாக பேசிய வழக்கில் மத்திய அமைச்சர் நாராயண் ராணே கைது. ஆக. 27: தமிழகத்தின் இல.கணேசன் மணிப்பூர் கவர்னராக பதவியேற்பு. ஆக. 29: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'விக்ரஹா' ரோந்து கப்பல் கடலோர காவல்படையில் சேர்ப்பு. நீளம் 321 அடி. 11 கடற்படை அதிகாரி, 110 மாலுமி பணியாற்றலாம். நீதி காக்க...: ஆக. 31: முதன்முறையாக ஒரே நேரத்தில் ஒன்பது உச்சநீதிமன்ற நீதிபதிகள் பதவியேற்பு. இதில் 3 பேர் பெண்கள்.செப். 1: 'ஹரே கிருஷ்ணா இயக்க(இஸ்கான்) நிறுவனர் ஸ்ரீல பக்தி வேதாந்தா சுவாமி நினைவாக ரூ. 125 நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். செப். 9: 'பிரிக்ஸ்' மாநாட்டில் பிரதமர் மோடி காணொளி மூலம் பங்கேற்பு. செப். 11: காசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலையில் பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு. செப். 16: நாடு முழுதும் பயன்படுத்தும் வாகனங் களுக்கான, 'பி.எச்., பதிவெண்' முறை நடைமுறைக்கு வந்தது. செப். 23: 'பி.எம்., கேர்ஸ்' அறக்கட்டளையின் நிதி, மத்திய அரசின் நிதி அல்ல என டில்லி உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல். * இந்திய விமானப்படை தலைமை தளபதியாக வி.ஆர்.சவுத்ரி நியமனம். செப். 27: சுகாதார அட்டைக்கான 'ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன்' திட்டத்தை பிரதமர் மோடி துவக்கினார். செப். 28: பஞ்சாப் காங்., தலைவர் சித்து ராஜினாமா. உலகம்ஆக. 3: அமெரிக்க பல்கலை நடத்திய சிறந்த அறிவாற்றல் தேர்வில் இந்திய வம்சாவளி மாணவி நடாஷா பெரி 11, வெற்றி.* அர்மேனியா அதிபராக நிகோல் பஷின்யான் பதவியேற்பு.ஆக. 15: அமெரிக்க படை வெளியேறியதை தொடர்ந்து ஆப்கன் தலைநகர் காபூலை தலிபான் பயங்கரவாத அமைப்பு கைப்பற்றியது. * காபூலில் இருந்து கத்தார் சென்ற அமெரிக்க படையின் சரக்கு விமானத்தில் 640 பேர் நெரிசலுடன் தப்பினர். ஆக. 21: மலேசிய பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாகோப் பதவியேற்பு. ஆக. 26: ஆப்கன் தலைநகர் காபூல் விமான நிலையத்தின் வெளியே குண்டு வெடித்ததில் 85 பேர் பலி. * உலகில் முதல் முறையாக 2 வயது குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி திட்டம் கியூபாவில் துவக்கம்.செப். 15: காற்றில் இருந்து ஆண்டுக்கு 400 டன் கார்பனை உறிஞ்சும் உலகின் பெரிய ஆலை ஐஸ்லாந்தில் திறப்பு.செப். 20: ரஷ்யாவின் பெர்ம் மருத்துவ பல்கலை துப்பாக்கிச் சூட்டில் 8 மாணவர் பலி.செப். 22: கனடா பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி வெற்றி. * உலகின் வயதான இரட்டை சகோதரிகளாக ஜப்பானின் யுமினோ சுமியாமா, கொவ்மி கொடமா (107 வயது) கின்னஸ் சாதனை.முதன்முறை: செப். 24: வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி-- அமெரிக்க அதிபர் பைடன் முதன்முறையாக சந்திப்பு.டாப் - 4ஆக. 14 : அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் திட்டப்படி 54 பேருக்கு பணி நியமனம். ஆக. 15: சென்னையில் 75வது சுதந்திர தின நினைவுத்துாண் திறப்பு. ஆக. 15: ஹைதி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1,300 பேர் பலி. ஆக. 31: ஆப்கனில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !