உள்ளூர் செய்திகள்

விருதுகள் - 2018!

ஆறு கிராமி - ஜன., 28: அமெரிக்க பாடகர் புருனோ மார்ஸ், இசை உலகின் உயரிய 6 கிராமி விருதுகளை வென்றார். நான்கு ஆஸ்கர் - மார்ச் 4: சிறந்த படம், இயக்கம், இசை, தயாரிப்பு என 4 ஆஸ்கர் விருதுகளை 'தி ஷேப் ஆப் வாட்டர்' (ஆங்கில மொழி) படம் பெற்றது.இசைஞானிக்கு... - மார்ச் 20: தமிழகத்தில் இருந்து பத்ம விபூஷண் விருதுக்கு இளையராஜா, பத்ம பூஷண் விருதுக்கு நாகசாமி, பத்ம ஸ்ரீ விருதுக்கு நன்னம்மாள், வாசுதேவன், விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், ரோமுலஸ் விட்டேகர் தேர்வு. மறையாத 'மயிலு' - மே 3: தேசிய அளவில் சிறந்த நடிகைக்கான விருதுக்கு மறைந்த ஸ்ரீதேவி தேர்வு. சிறந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான விருதை 'டூ லெட்' படம் பெற்றது.புக்கர் 'மில்க்மேன்' - அக்., 17 : இலக்கியத்துக்கான புக்கர் விருதுக்கு 'மில்க்மேன்' (ஆங்கில மொழி) நாவலை எழுதிய அயர்லாந்தின் அன்னா பர்ன்ஸ் தேர்வு. சாதித்த 'சஞ்சாரம்' - டிச., 5: தமிழ்மொழி பிரிவில் 'சஞ்சாரம்' என்ற நுாலுக்காக சாகித்ய அகாடமி விருதுக்கு எழுத்தாளர் ராமகிருஷ்ணன் தேர்வு.நோபல் வென்றவர்கள்இயற்பியல்ஆர்தர் அஷ்கின் (அமெரிக்கா)ஜெரார்ட் மொரோ (பிரான்ஸ்)டான்னா ஸடிரிக்லேண்ட் (கனடா) வேதியியல்பிரான்சிஸ் அர்னால்ட் (அமெரிக்கா)ஜார்ஜ் ஸ்மித், கிரிகரி வின்ட்டர் (அமெரிக்கா)அமைதிடெனிஸ் முக்வேஜா (காங்கோ)நாடியா முராத் (ஈராக்) - போரில் நடத்தப்படும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக போராடியவர்.மருத்துவம்ஜோம்ஸ் பி அலிசன் (அமெரிக்கா)தசுக்கு ஹோன்ஜோ (ஜப்பான்)பொருளாதாரம்வில்லியம் நார்தாஸ், பால் ரோமர் (அமெரிக்கா)இலக்கியம்இந்தாண்டு பரிசு அறிவிக்கப்படவில்லை.ஞானபீட கவுரவம்டிச., 15; ஆங்கில எழுத்தாளர் அமிதவ் கோஷ், ஞானபீட விருதுக்கு தேர்வு.இந்தியர்களுக்கு மகசேசேபிலிப்பைன்சின் 'ராமன் மகசேசே' விருதுக்கு இந்தியாவின் பாரத் வாத்வானி, சோனம் வான்சக் தேர்வு. தமிழருக்கு பெருமைஅக்., 29: முதல் உலக வேளாண்மை விருது, எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு வழங்கப்பட்டது. இந்திய உணவு, விவசாய கவுன்சில் இவ்விருதை இந்தாண்டு துவக்கியது. சுற்றுச்சூழல் காவலன்அக்., 2: டில்லியில் பிரதமர் மோடிக்கு 'சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்' விருதை ஐ.நா., பொதுச்செயலர் அன்டோனியா கட்டார்ஸ் வழங்கினார். ஐ.நா., 2005ல் இவ்விருதை உருவாக்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !