உள்ளூர் செய்திகள்

டிசம்பர்

***********************தமிழகம்************************

டிச., 1: ஆண்டிபட்டி அருகே தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 17 பேர் பலி.டிச., 9: தேசிய பாதுகாப்பு சட்டத்தில் டைரக்டர் சீமான் கைது செய்யப் பட்டது செல்லாது என சென்னை ஐகோர்ட் உத்தரவு.டிச., 10: நடிகர் அரவிந்தசாமி- காயத்ரிக்கு சென்னை குடும்ப நல கோர்ட் விவாகரத்து வழங்கியது.டிச., 11: எச்.ஐ.வி.,யால் பாதிக்கப் பட்டவர்கள் அரசு மருத்துவமனை களுக்கு மாதத்துக்கு 4 முறை செல்ல இலவச பஸ் பாஸ் வழங்க முதல்வர் அறிவிப்பு.டிச., 16: தமிழக அரசு நிர்ணயித்த பள்ளிக்கல்வி கட்டணம் செல்லும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு.

டிச., 25: குற்ற ஆவண காப்பக பதிவேட்டின்படி, தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கடந்த ஆண்டை விட 23 சதவீதம் அதிகரித்துள்ளது. டிச., 30: தமிழக சட்டசபை தேர்தல் குறித்து, தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி, அரசியல்கட்சிகளுடன் ஆலோசனை.

*****************************************************இந்தியா*****************************************************

டிச., 1: கோவாவில் மூன்று நாள் நடந்த சர்வதேச திரைப்பட விழா நிறைவு.* ஒலியின் வேகத்தை விட 2.8 மடங்கு, அதிவேகமாக செல்லக்கூடிய பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி.டிச., 3: மத்திய புலனாய்வு துறையின் (சி.பி.ஐ.,) இணையதளத்தை, பாகிஸ்தான் சைபர் கிரைம் (ஹேக்) சீர்குலைத்தது. இணையதள முகப்பில் 'பாகிஸ்தான் சிந்தாபாத்' என்ற வாசகமும் இடம் பெற்றிருந்தது.டிச., 4: சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அசாம் கான், மீண்டும் அக்கட்சியில் இணைந்தார்.டிச.,5: அணு ஒப்பந்தம்: மூன்று நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்த பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோசி பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார். இவரது பயணத்தில், மகாராஷ்டிராவில் மின் தயாரிப்புக்கான அணு உலைகளை அமைப்பது உள்ளிட்ட ஏழு அணுசக்தி தொடர்பான ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கிடையே கையெழுத்தாகின.டிச., 7: உ.பி., முன்னாள் தலைமை செயலாளர் நீரா யாதவ், நில மோசடியில் ஈடுபட்டதால், அவருக்கு சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் நான்கு ஆண்டு சிறை தண்டனை விதித்தது.* குண்டுவெடிப்பு: டிச. 7ம் தேதி, உத்தரபிரதேசத்தில் உள்ள வராணாசியில் ஷீத்தல் காட் அருகே 'கங்கா ஆர்த்தி' நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது பயங்கரவாதிகள் நிகழ்த்திய குண்டு வெடிப்பில் சிக்கி சிறுவன் உள்ளிட்ட இரண்டு பேர் பலியானர்கள். வெளி நாட்டினர் உள்பட 35க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்தனர். தாக்குதலுக்கு இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. குற்றவாளிகளை தேடும் பணி நடந்து வருகிறது.டிச., 9: அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மீரா சங்கர், அந்நாட்டு விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டார். இச்சம்பவத்துக்கு இந்தியா கண்டனம்.டிச., 10: பெல்ஜியத்தில் உள்ள பிரஸ்ஸல்ஸ் நகரில் நடந்த இந்திய - ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பு.டிச., 11: மும்பை தாக்குதலில் பலியான ஹேமந்த் கர்கரேவுக்கு இந்து பயங்கரவாதிகளிடமிருந்து அச்சுறுத்தல்இருந்தது என காங்., கட்சியின் திக் விஜய் சிங் பேச்சு. இதற்கு பா.ஜ., கடும் எதிர்ப்பு.டிச., 12: சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 10 நாடுகளின் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கறுப்பு பணம் பற்றிய தகவல்களை, இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள முன்வந்துள்ளதாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தகவல்.டிச., 13: பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் ஒரு நாள் கூட முழுமையாக நடைபெறாமல் முடிந்தது. 146 கோடி ரூபாய் இழப்பு.* தேசிய அளவில் மருத்துவ படிப்புக்கு ஒரே நுழைவுத்தேர்வு நடத்துவது என்ற மருத்துவ கவுன்சிலின் முடிவில் தலையிட சுப்ரீம் கோர்ட் மறுப்பு.டிச., 19: காங்., கட்சியின் அகில இந்திய மாநாடு டில்லியில் நடந்தது.

டிச., 27: '2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில், அரசுக்கு 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக அறிக்கை அளித்த தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி வினோத் ராய், பொது கணக்குக் குழு முன் ஆஜர்.* இந்தியா - இலங்கை ராணுவ உறவை பலப்படுத்தும் வகையில் ராணுவ செயலர் பிரதீப் குமார் மூன்று நாள் பயணமாக கொழும்பு சென்றார். டிச., 29: இட ஒதுக்கீடு கோரிய ராஜஸ்தான் குஜ்ஜார்இன மக்கள், பேச்சுவார்த்தைக்கு சம்மதித்து போராட்டத்தை கைவிட்டனர்.டிச., 30: கிருஷ்ணா நதிநீர் பிரச்னையில் நடுவர் மன்ற தீர்ப்பு வெளியானது. உபரி நீரில் ஆந்திராவுக்கு அதிக பங்கு.

*****************************************************உலகம்*****************************************************

டிச., 2: இலங்கை இறுதிக்கட்ட போர் குற்றங்கள் குறித்த வீடியோவை பிரிட்டன் சேனல் ஒன்று வெளியிட்டது. இதனால் ராஜபக்ஷேவின் பிரிட்டன் பயணம் கைவிடப்பட்டது.டிச., 6: மலேசிய இந்திய காங்., கட்சி தலைவராக 31 ஆண்டுகளாக இருந்த சாமிவேல் பதவி விலகியதையடுத்து புதிய தலைவராக கோவிந்தசாமி பழனிவேல் பொறுப்பேற்பு.டிச., 8: சாண்டியாகோ நகர மத்திய சிறையில், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில், 83 கைதிகள் பலிடிச., 12: இலங்கையில் தேசிய கீதம் இனி சிங்கள மொழியில் மட்டுமே இசைக்கப்படும் என அதிபர் ராஜபக்ஷே அறிவிப்பு. அடுத்த நாளே அதற்கு மறுப்பும் தெரிவித்தது.டிச., 13: தூதருக்கு அவமரியாதை: அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மீரா சங்கரைத் தொடர்ந்து டிச., 13ம் தேதி ஐ.நா.,வுக்கான இந்திய தூதர் ஹர்தீப் சிங் புரியை அமெரிக்க விமான நிலைய அதிகாரிகள் சோதனையிட்டு அவமதித்தனர்.டிச., 14: ஆப்கன் மற்றும் பாகிஸ்தானுக்கான அமெரிக்க சிறப்பு தூதர் ரிச்சர்ட் ஹால்புரூக் உடல்நலக் குறைவால் மரணம்.டிச., 15: ஆஸ்திரேலியாவில் தஞ்சம் அடைவதற்காக சென்றவர்களின் படகு கிறிஸ்துமஸ் தீவில் உள்ள பாறையில் மோதியதில் 30க்கும் மேற்பட்டோர் பலி.

* இந்தியாவில் வென்: டிச. 15ல், இந்தியா வந்த சீன பிரதமர் வென் ஜியாபோ, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார். இரு நாடுகளுக்கு இடையே கலாசாரம், வங்கி, மீடியா, பசுமை தொழில்நுட்பம், வர்த்தகம் ஆகிய துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.சீனாவின் கோபம்: நார்வே தலைநகர் ஆஸ்லோவில் டிச., 10ம் தேதி, 2010ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு சீனாவின் மனித உரிமை ஆர்வலர் லீ ஜியாபோவுக்கு வழங்கப்பட்டது. சீன அரசு இவரை சிறை வைத்திருந்ததால், இவரால் விழாவில் பங்கேற்க முடியவில்லை. உலக நாடுகள் பலவும் இவரை விடுதலை செய்ய வலியுறுத்தின. ஆனால் இதற்கு சீனா செவிசாய்க்கவில்லை. மேலும் சீனா உள்ளிட்ட இதன் 17 நட்பு நாடுகள் இந்த விழாவை புறக்கணித்தன. பாட்டியாக ' கன்பூசியஸ் அமைதி பரிசு' என்ற விருதையும் புதிதாக உருவாக்கியது.

டிச., 25: நைஜீரியா ஜாஸ் நகரில், கிறிஸ்துமஸ் தினத்தன்று மதக்கலவரம் ஏற்பட்டதால் 86 பேர் பலி.

*****************************************************விளையாட்டு*****************************************************

டிச. 2: உலக கோப்பை கால்பந்து தொடரை நடத்தும் உரிமையை ரஷ்யா(2018), கத்தார்(2022) நாடுகள் பெற்றன. டிச. 5: உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா 3வது இடம் பிடித்தது.டிச. 6: டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் செர்பிய அணி கோப்பை வென்றது.டிச. 7: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் நீக்கத்துக்கு, மும்பை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்தது. டிச. 10: தேசிய சீனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழகத்தின் ஜோஷ்னா சின்னப்பா சாம்பியன்.டிச. 12: ஹாங்காங் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடரில், செய்னா நேவல் சாம்பியன்.டிச. 16: லண்டன் செஸ் கிளாசிக் தொடரில், இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 2வது இடம்.டிச. 19: டெஸ்ட் அரங்கில் 50 சதம் அடித்த உலகின் முதல் வீரர் என்ற சாதனை படைத்தார் இந்தியாவின் சச்சின்.

டிச. 28: ஐ.பி.எல்., முறைகேடுதொடர்பாக, அதன் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு, சென்னை போலீஸ் சம்மன் அனுப் பியது.டிச. 29: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்டில் 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்ட இந்திய அணி, டர்பன் கிங்ஸ்மிட் மைதானத்தில் முதல் வெற்றியை பதிவு செய்து புதிய வரலாறு படைத்தது. இது தென் ஆப்ரிக்க மண்ணில் இந்தியாவுக்கு கிடைத்த 2வது வெற்றி.* ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடந்த ஆஷஸ் 4வது டெஸ்டில், இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 157 ரன்வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆஷஸ் கோப்பையை தக்கவைத்துக் கொண்டது. டிச. 30: பாகிஸ்தான் அணிக்கு எதிரான 'டுவென்டி-20' தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !