2025 நவம்பரில் நடந்த நிகழ்வுகள்
தமிழகம்நவ.2: கோவையில் கல்லுாரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை. குற்றம்சாட்டப் பட்ட மூவரை போலீசார் சுட்டு பிடித்தனர். நவ.3: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி (எஸ்.ஐ.ஆர்.,) துவக்கம். நவ.5: தான்சானியாவில் கிளிமஞ்சாரோ சிகரத்தில் (19,340 அடி) ஏறி மதுரை காரியாபட்டி சிறுவன் சிவ விஷ்ணு 5, சாதனை. நவ.14: துாய்மை பணியாளர் களுக்கு மூன்று வேளை இலவச உணவு வழங்கும் திட்டம் சென்னையில் துவக்கம். நவ.19: கோவையில் நடந்த இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு.நவ.24: கும்மிடிபூண்டியில் 2005ல் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சுதர்சனத்தை சுட்டுக் கொன்று அவரது வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 3 பேருக்கு தலா 4 ஆயுள் தண்டனை விதித்தது சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம்.* தென்காசி அருகே துரை சாமிபுரத்தில் தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து. 7 பேர் பலி. நவ.27: எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், த.வெ.க., வில் இணைந்தார். நவ.30: சிவகங்கை திருப் புத்துார் அருகே கும்மங்குடியில் இரு அரசு பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து. 11 பேர் பலி. இந்தியாநவ.1: வறுமையில்லா மாநிலங் களின் பட்டியலில் கேரளாவுக்கு முதலிடம். * ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் ஸ்ரீவெங்கடேச பெருமாள் கோயிலில் நெரிசல். 9 பேர் பலி. நவ.3: தெலுங்கானாவில் ஐதராபாத் அருகே பஸ்- லாரி மோதி விபத்து. 21 பேர் பலி. * பாபா அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி என கூறி, முக்கிய அணுசக்தி தகவலை வெளிநாடுகளில் பரிமாறி கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்த அக்தர் ஹுசைனி கைது.நவ.4: சத்தீஸ்கரின் பிலாஸ் பூரில் பயணிகள் ரயில், சரக்கு ரயில் மீது மோதி விபத்து. 11 பேர் பலி. நவ.7: 'வந்தே மாதரம்' தேசியப்பாடலின் 150வது ஆண்டுவிழாவில், சிறப்பு நாணயம், தபால் தலை வெளியிட்டார் பிரதமர் மோடி.நவ.11: பூடான் தலைநகர் திம்புவில் மன்னர் ஜிக்மே நாம்கியேல் வாங்சுக் - பிரதமர் மோடி சந்திப்பு. நவ.14: பீஹார் சட்டசபை தேர்தலில் 243 தொகுகளில் தே.ஜ., கூட்டணி 202 (பா.ஜ., 89, ஐ.ஜ.த., 85, லோக் ஜனசக்தி 19, மற்றவை 9) வெற்றி. மகாகட்பந்தன் 35ல் (ரா.ஜ.த., 25, காங்., 6, மற்றவை 4) வெற்றி. நவ.19: ஆந்திராவின் புட்டபர்த்தியில் ஸ்ரீசத்ய சாய் பாபாவின் நுாற்றாண்டு விழாவில் சிறப்பு நாணயம், தபால் தலை வெளியிட்டார் பிரதமர் மோடி. நவ.21: நடைமுறையில் இருந்த 29 தொழிலாளர் சட்டங் களை ஒருங்கிணைத்து மத்திய அரசு கொண்டு வந்த 4 புதிய சட்டங்கள் அமல். நவ.24: 'ஐ.என்.எஸ்., மாஹே' போர்க்கப்பல் இந்திய கப்பல்படையில் இணைப்பு. * உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் பதவியேற்பு. நவ.28: ஆந்திர மாவட்ட எண்ணிக்கை 26ல் இருந்து 29 என அதிகரிப்பு. நவ.28: ஆசியாவில் உயரமான வெண்கல ராமர் சிலை (77 அடி), கோவாவின் ஸ்ரீ சமஸ்தான் கோகர்ண ஜீவோத்தம் மடத்தில் திறப்பு. நவ.30: கவர்னர் மாளிகையின் (ராஜ் பவன்) பெயர், 'லோக் பவன்' என மாற்றம். உலகம்நவ.1: புகையிலை இல்லா தலைமுறையை உருவாக்கும் வகையில் 2007 ஜன. 1க்கு பின் பிறந்தவர்கள் புகையிலை பயன்படுத்த தடை விதித்த முதல் நாடானது மாலத்தீவு. நவ.12: பிரேசிலில் ஐ.நா., சபையின் 30வது பருவநிலை மாற்றம் மாநாடு நடந்தது. நவ.13: அமெரிக்க வரலாற்றில் நீண்டகாலம் (43 நாள்) தொடர்ந்த அரசு பணி முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர, பார்லியில் நிறைவேற்றப்பட்ட நிதி மசோதாக்களில் அதிபர் டிரம்ப் கையெழுத்து. நவ.17: சவுதி மதீனாவில் பஸ் - டேங்கர் லாரி மோதி தீப்பற்றியது. தெலுங்கானாவை சேர்ந்த 45 பேர் பலி.* வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்தது.நவ.21: துபாயில் சர்வதேச விமான கண்காட்சியில் இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் கீழே விழுந்து தீப்பிடித்தது. பைலட் விங் கமாண்டர் நமன்ஷ் சியால் உயிரிழந்தார்.நவ.23: ஆப்ரிக்காவில் முதன் முறையாக (ஜோகன் னஸ்பர்க், தென் ஆப்ரிக்கா) நடந்த 20வது 'ஜி-20' மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு. நவ.25: உலகில் மக்கள் தொகை அதிகமுள்ள மாநகரங் களில் ஜப்பான் டோக்கியோவை முந்தி முதலிடம் பெற்றது இந்தோனேஷியா ஜகார்தா (4.2 கோடி). நவ.27: ஹாங்காங்கில் அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து. 65 பேர் பலி. நவ.30: ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் 62, காதலி ஜோடி ஹேடனை 44, திருமணம் செய்தார். அந்நாட்டில் பதவிக்காலத்தில் திருமணம் செய்த முதல் பிரதமரானார். லடாக் விமான தளம்நவ.13: சீன எல்லை அருகே உலகின் உயரமான இடத்தில் (13,700 அடி, லடாக்) இந்தியா அமைத்த நியோமா விமானப்படை தளம். ஓடுதளம் நீளம் 3.5 கி.மீ., கார் பயங்கரம்நவ.10: டில்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே கார் வெடிப்பு. காரை ஓட்டிய பயங்கரவாதி டாக்டர் உமர் நபி உட்பட 15 பேர் பலி.சபாஷ் நிதிஷ்நவ.20: பா.ஜ., - ஐ.ஜ.த., கூட்டணி சார்பில் பீஹார் முதல்வரானார் நிதிஷ்குமார். இது 10வது முறை. 'கண்ணீர்' தேசம்டிச.29: வங்கக்கடலில் உருவான 'டிட்வா' புயலால் இலங்கையில் 644 பேர் பலி.டாப் 4* நவ.15: சுற்றுச்சூழல் ஆர்வலர் கர்நாடகாவின் சாலுமரத திம்மக்கா 114, காலமானார். * நவ.21: தாய்லாந்தில் 'மிஸ் யுனிவர்ஸ் - 2025' போட்டியில் பாத்திமா பூச் (மெக்சிகோ) பட்டம் வென்றார்.* நவ.24: எத்தியோப்பியாவில் 'எய்லிகுப்பி' எரிமலை 12 ஆயிரம் ஆண்டுக்குப்பின் வெடித்தது. இதன் சாம்பல் ஏமன், ஓமன் வழியாக இந்திய வடமாநிலங்களை கடந்து சீனா வரை பரவியது. * நவ.25: கோவை காந்திபுரத்தில் 45 ஏக்கரில் ரூ.208.5 கோடியில் அமைக்கப்பட்ட செம்மொழி பூங்கா திறப்பு.