உள்ளூர் செய்திகள்

அப்துல் கலாம் என்ற உயர்ந்த மனிதர்!

அப்துல் கலாம், ஜனாதிபதியாக இருந்தபோது, அவருடைய செயலாளராக இருந்தவர், பி.எம்.நாயர்.இவர் தற்போது, 'கலாம் எபக்ட்' என்ற பெயரில், ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதுபற்றி, சமீபத்தில், 'டிவி' நிகழ்ச்சி ஒன்றில், பேட்டி கொடுத்தார்.அதில் அனுபவித்த சில சுவையான தகவல்கள், வாசகர்களுக்காக...* நாட்டின் தலைமை பதவியில் உள்ளோர், வெளிநாடுகளுக்கு சென்றால், அந்த நாடு, அவர்களுக்கு, விலை உயர்ந்த பொருட்களை பரிசாக அளிக்கும். அப்படி, அப்துல் கலாம் வெளிநாடுகள் சென்றபோதெல்லாம் பரிசுகள் கிடைத்தனவந்த பரிசுகள் அனைத்தையும் புகைப்படம் எடுத்து வரிசைப்படுத்தி, அவற்றை வைத்து காப்பாற்றும் இடத்திற்கு அனுப்பி விட்டார். பிறகு, அவற்றை திரும்பி கூட பார்க்கவில்லை* உண்மையில், ராஷ்டிரபதி பவனை விட்டு, பதவி காலம் முடிந்து புறப்பட்டபோது, ஒரு பென்சிலை கூட எடுத்துச் செல்லவில்லை* கடந்த, 2002ல், ரம்ஜான் மாதமான, ஜூலை - ஆகஸ்ட்டில், ஜனாதிபதியாக பதவி ஏற்றார், அப்துல் கலாம். இது சமயம், முக்கிய பிரமுகர்களை அழைத்து, (ரம்ஜான்) 'பார்ட்டி' கொடுப்பது வழக்கம்இதுபற்றி கேள்விப்பட்ட, அப்துல் கலாம், 'மொத்தம் எவ்வளவு செலவாகும்...' என, கேட்டார்'அது சார்ந்த, செலவு, 22 லட்சம் ரூபாய்...' என, பதில் தரப்பட்டது 'பார்ட்டி' நடத்தவில்லை. மாறாக, அந்த பணத்தில், உணவு, உடைகள், போர்வை, ஜமக்காளம் உட்பட பலவற்றை வாங்கி, நகரில் உள்ள அனாதை மற்றும் முதியோர் இல்லங்களுக்கு வழங்க சொன்னார், அப்துல் கலாம்அவர் கூறியபடியே வாங்கி, அவற்றை, அப்துல் கலாமிடம் காட்டினோம். அப்போது, என்னை தனியாக அழைத்து, தன்னுடைய சுய சேமிப்பிலிருந்து, 1 லட்சம் ரூபாயை எடுத்துக் கொடுத்து, அதற்கும் சேர்த்து பொருட்களை வாங்கி கொடுக்க சொன்னார். அத்துடன், 'இதுபற்றி யாரிடமும் கூறக் கூடாது...' என்றும், கூறி விட்டார் அதற்கு நான், 'இப்ப சொல்லலேன்னாலும், பின்னாளில் கூறுவேன்...' என்றேன் * கலாமுக்கு, 'ஆமாம் சாமி' போடும் ஆட்களை கண்டாலே பிடிக்காது ஒரு சமயம், இந்தியாவின் தலைமை நீதிபதி, ஒரு விஷயம் பற்றி பேசுவதற்காக, அப்துல் கலாமிடம் வந்தார். அதற்கு, அப்துல் கலாம், தன் கருத்துகளை கூறினார்உடனே என்னிடம், 'என் கருத்தை ஒப்புக்கொள்கிறீர்களா...' என, கேட்டார்அதற்கு, 'இல்லை. உங்கள் கருத்துடன் நான் ஒத்துப்போகவில்லை...' என்றேன்இதை கேட்டுக் கொண்டிருந்த, தலைமை நீதிபதிக்கு அதிர்ச்சி ஒரு அரசு ஊழியர், ஜனாதிபதி கருத்துக்கு மாற்று கருத்து கூறுவது, அதுநாள் வரை கேள்விப்படாத விஷயம். அதுவும், அடுத்தவர் முன்னிலையில் நான் இப்படி கூறியது, அவருக்கு திகைப்பாய் இருந்ததுஇதை கவனித்த நான், ஜனாதிபதியிடம், 'இதுபற்றி என்னிடம், தாங்கள் பிறகு கேட்கலாம்...' என்றேன்ஒரு கருத்தில் உள்ள நியாயத்தை அவர் ஏற்றுக்கொண்டால், அதன்பின், தன் கருத்தை மாற்றிக் கொள்ளவும் தயங்க மாட்டார், கலாம்* தன்னுடைய, 50க்கும் அதிகமான உறவினர்களை டில்லி வரவழைத்து, தங்க வைத்து, பஸ் ஏற்பாடு செய்து, நகரத்தை சுற்றி பார்க்கவும் செய்தார், கலாம்அரசு காரை பயன்படுத்தவில்லை. அவர்களுடைய தங்குதல் மற்றும் உணவு செலவு கணக்குகள் மொத்தம், 2 லட்சம் ரூபாய் என, அறிந்தபோது, தன் பணத்திலிருந்து எடுத்து கட்டி விட்டார்தன்னுடைய மூத்த சகோதரரை மட்டும், ஒரு வாரம் தன்னுடன் கூடவே தங்க வைத்துக் கொண்டார். அவர், ஊருக்கு சென்றதும், தங்கியிருந்த அறைக்கு, வாடகை எவ்வளவு என கேட்டு, அதையும் கொடுத்து விட்டார்* அப்துல் கலாம், ஜனாதிபதி பதவி காலம் முடிந்து புறப்பட்ட சமயம், அனைத்து ஊழியர்களும் சென்று, அவரை சந்தித்தனர். நானும் அவரை, தனியாக சந்தித்தேன். அப்போது அவர், என்னுடைய மனைவி ஏன் வரவில்லை என, கேட்டார்'திடீரென அவருக்கு, காலில், எலும்பு முறிவு ஏற்பட்டு, வீட்டில் இருக்கிறார்...' என்றேன்அடுத்த நாள், வாசல் பக்கம் வந்தபோது, நிறைய போலீஸ்காரர்கள் தென்பட்டனர்'விஷயம் என்ன...' என, கேட்டேன்என் வீட்டிற்கு, ஜனாதிபதி வர உள்ளதாக கூறினர்.சொன்னபடி, கொஞ்ச நேரத்தில் வந்தார், கலாம். மனைவியிடம் நலம் விசாரித்து, சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். பிறகு, கிளம்பி சென்று விட்டார்இதுவரை, எந்த நாட்டு ஜனாதிபதியும், ஒரு அரசு ஊழியரின் வீட்டிற்கு விஜயம் செய்ததில்லை. அதுமட்டுமல்ல, மிக சாதாரண ஒரு காரணத்திற்காக, வந்து சென்றது, அதை விட ஆச்சரியம்.அப்துல் கலாமின் இளைய சகோதரர் ஒருவர், குடை பழுதுபார்க்கும் கடை வைத்துள்ளார். மொத்தம், 16 டாக்டர் பட்டங்களை பெற்றுள்ளார், அப்துல் கலாம்.தன்னுடைய கடைசி, 8 ஆண்டு ஓய்வூதிய பணத்தை, தன் கிராம வளர்ச்சிக்காக தந்து விட்டார், கலாம்.ராஜிராதா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !