தம்பதியரை வாழ வைக்கும், விசேஷ மரம்!
இங்கு, மரத்தடியில் திருமண தம்பதியர் பலர் புகைப்படத்துக்கு, 'போஸ்' கொடுப்பதை காணலாம். கேரள மாநிலம், திருச்சூரில் உள்ள, குருவாயூர் கோவில் வளாகம் தான் இது. இங்குள்ள மரத்தடியில் மணமக்கள் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வதால், நீண்ட காலத்துக்கு, சந்தோஷமாக, ஒற்றுமையாக வாழ்வர் என்ற நம்பிக்கை உள்ளது.குருவாயூர் கோவிலில், ஒரே நாளில் நுாற்றுக்கணக்கில் திருமணங்கள் நடப்பதுண்டு. மணமக்கள் மரத்தடியில் நின்றபடியும், உட்கார்ந்தும் புகைப்படத்துக்கு 'போஸ்' கொடுப்பது வழக்கம். சில சமயம், கூட்ட நெரிசலில் சிக்கி ஜோடி மாறி போவதும் உண்டு. இந்த சம்பவத்தை மையமாக வைத்து மலையாள சினிமா ஒன்று வெளியானது. எனவே, புகைப்படம் எடுக்கும்போது மணமக்கள் ஒருவரை ஒருவர் கெட்டியாக பிடித்துக் கொள்வர்.— ஜோல்னாபையன்