உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

* என். ஜெயன், திருப்பூர்: ஒரு சிலர், கல்வி கற்காமலேயே நல்ல முன்னேற்றம் காண்பது எப்படி?மூளை என்று ஒன்று இருக்கிறது அல்லவா... அதை சரியான முறையில் பயன்படுத்தினால் போதும்!பிறந்த நாள், 'கேக்'கை ஆளைக் கொல்லும் அரிவாளால் வெட்டும், 'அறிவாளி'களுக்கு, சசிகலா இருப்பது போன்ற அறையும், வார்டும் தான் கிடைக்கும்! எஸ். நுார்பாஷா, சின்னாம்பாளையம், பொள்ளாச்சி:'ஆங்கிலம் தெரியாது; டீ வாங்கி வருவது, என் முக்கிய வேலை; இதற்கு பயன்படுத்துவது, 'அட்லஸ்' மிதிவண்டி...' என, எளிமையாக காட்டிக் கொள்கிறீர்களே... இது, கொஞ்சம், 'ஓவரா'கத் தெரிகிறதே...உள்ளதை, உள்ளபடி சொன்னால், பலருக்கு ஜீரணித்துக் கொள்ள முடிவதில்லை. நான் என்ன செய்வது!ரா.சா. சந்திரசேகர், சென்னை:ஜெ., அண்ணன் மகள் தீபாவை, அ.தி.மு.க., நிராகரித்து விட்டதே?தீபா ஓட்டே, அவருக்கு கிடைக்காதே... பிறகு, ஏன் இந்த வீண் வம்பு. தீபா கூட்டத்துக்கு மக்கள் மீது கண் கிடையாது; ஜெ., சொத்து மீது தான்! பி. கார்த்திகேயன், சென்னை: இஸ்லாமிய நண்பர் ஒருவர், 'நடுநிலை நாளேடான, 'தினமலர்' இதழை, நாங்கள் தவறாமல் படிக்கிறோம்; நேசிக்கிறோம்; வாசிக்கிறோம். ஆனால், எங்கள் பற்றிய செய்திகளை, ஆன்மிக தகவல்களை வெளியிடுவதில், 'தினமலர்' ஏனோ தயங்குகிறது...' என, கூறுகிறாரே... உண்மையா?அவர், 'தவறாமல் படிக்கிறோம்...' என்பது சரி அல்ல... ரம்ஜானை ஒட்டி, 29 நாட்கள், தினசரி, 20 செ.மீ., உயரம் இரண்டு பத்தி அளவில், அவ்விழா பற்றி, அதன் முக்கியத்துவம் பற்றி தகவல்கள் வெளியிட்டோம்! ரம்ஜான் மற்றும் பக்ரீத்துக்கு, இரண்டு பக்க சிறப்பு மலர்கள் வெளியிடுகிறோம். இதுபோல், வேறு எந்த பத்திரிகை செய்தது?அவரிடமே விசாரியுங்கள்!ராஜி குருசுவாமி, சென்னை: அடிக்கடி விசேஷங்களுக்கு செல்ல வேண்டி இருந்தால், மொய் வைத்து விட்டு வருவீர்களா அல்லது வாழ்த்துடன் சரியா?இரண்டாவதே சரி என, என் தலைவர், லேனா தமிழ்வாணனிடமிருந்து கற்றுக் கொண்டேன்!மொய் வைக்கும் பழக்கம், அவரிடமிருந்தால், மாதம், 10 லட்சம் ரூபாய் அல்லவா தேவைப்படும். அதற்கு எத்தனை, 'சைபர்' போடுவது என்பதே, எனக்குத் தெரியாதே!* எஸ். மதிவாணன், தேவகோட்டை: ஒரே தேசம், ஒரே ரேஷன், ஒரே கல்வி, உங்கள் கருத்தை ஒரே வார்த்தையில் சொல்லுங்கள்!தேவை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !