உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

ஆர்.கனகராஜ், மதுரை: நேற்று, இன்று, நாளை?நேற்றும், இன்றும் ரஜினி ஒரு நடிகர். நாளை, அவர் கை காட்டுபவர், முதல்வர் ஆகலாம்! இல்லாவிட்டால், முகவரி இல்லாமலே போகலாம்!ஆர்.சாந்தி, பொள்ளாச்சி: பெண்கள் முன்னேறி விட்டனரா?இப்போதெல்லாம், 'டூ வீலர்'களை பெண்கள் தானே ஓட்டிச் செல்கின்றனர். ஆண்கள் பின்னால் தானே உட்காருகின்றனர்; பெண்கள் முன்னேறி விட்டனர் தானே! * வி.கோபால், நெல்லை: உண்மையான நண்பன் என யாரை, 'செலக்ட்' செய்வது?உண்மையான நண்பன், காட்டுக்கு கூப்பிட்டாலும் வருவான்; மற்றவன், கோடை வாசஸ்தலங்களுக்கு கூப்பிட்டால் தான் வருவான்!ஆர்.கோபால், திருச்சி: ரஜினியை ஆதரிப்பவர்கள் யார்?திராவிடக் கட்சிகள், காங்கிரசை பிடிக்காதவர்கள் தான்! முதலில் ஆதரிப்போர், அவரது ரசிகர்கள்!* எம்.பழனியப்பன், திண்டுக்கல்: நான் ஒரு புதுக்கட்சி ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன்... என்ன சொல்கிறீர்கள்?'லெட்டர் பேட்' அடிப்பதிலும், 'போஸ்டர்' போடுவதிலும் கைக்காசை தொலைக்காதீர்கள் என்பது தான், என், 'அட்வைஸ்!' எம்.ரஜினி, திண்டுக்கல்: உலகிலேயே அதிக மொழி தெரிந்தவர், எந்த நாட்டினர்?எல்லா நாடுகளிலும் உள்ளனர்; ஆனால், அவற்றுக்கு மனித உயிர் கிடையாது! அச்சு இயந்திரங்களுக்குத் தான் அதிக மொழி தெரிந்திருக்கும்! கே.ராஜ்குமார், கோவை: அரசியல்வாதிகளுக்கு ஏதாவது அறிவுரை கூற விரும்புகிறீர்களா?இரண்டே கட்சிகள் இந்தியா முழுக்க பார்த்துக் கொள்ளுங்கள் என்பது ஒன்று... இரண்டாவது, ஆளும்கட்சிக்கு எதிராக, போராட்டங்கள் நடத்தாதீர்கள், அறிக்கைகளை வெளியிடாதீர்கள் என்பது தான்!ஆர்.பாலாஜி, மதுரை: பணக்காரர்களுக்கும், ஏழைக்கும் என்ன வித்தியாசம்?முதலாமவருக்கு, உண்ட உணவு செரிக்காமல் கஷ்டப்படுகிறார்; இரண்டாமவர், உணவு கிடைக்காமல் தவிக்கிறார்; இது தான் வித்தியாசம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !