உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

* மா. ராமச்சந்திரன், கமுதி: 'கட்சியை விட்டு சசிகலாவை நீக்கியது செல்லும்...' என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி?நீதிபதி சொன்னால், 100க்கு 100 சரியாகத்தான் இருக்கும்! இந்த நேரத்தில் தனிக்கட்சி தொடங்குவதற்கெல்லாம் யோசிக்காமல், சேர்த்து வைத்துள்ள சொத்துக்களை வைத்துக்கொண்டு, சசிகலா நிம்மதியாக வாழலாமே!உ. ராமநாதன், வடிவீஸ்வரம், நாகர்கோவில்: அந்துமணி அவர்களே... நீங்கள் காசிக்கு போயிருக்கிறீர்களா?இல்லை! ஆனால், நான் மூன்று வயது வரை வளர்ந்தது, உங்களின் வடிவீஸ்வரத்தில் தானாம். அடுத்து, திருநெல்வேலிக்கு கூட்டிச் சென்று விட்டனராம்!கி. கலா, புதுடில்லி: பொய் என்றால் என்ன?உண்மை எப்போதும், சுருக்கமாக பேசப்படும்... ஆனால், பொய் என்பதோ, மிக விரிவாக, விலாவாரியாக பேசப்படும்!* அ. ரவீந்திரன், குஞ்சன்விளை, குமரி: விடுதலை சிறுத்தை என்ற கட்சியின் தலைவர், திருமாவளவன், ஹிந்துக்களுக்கு எதிராக அரசியல் செய்து சாதிப்பது என்ன?தி.மு.க., பத்திரிகைகளிலும், அதே போன்ற, 'டிவி'களிலும், அவர் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெறும் படங்களை வரவழைப்பது தான்! சி. குமார், சென்னை: ஒரு மனிதனுக்கு சிறந்த அடையாளம் எது?சிறந்த அடையாளம் பண்பு என்பது... அதை, தன், இளம் வயதிற்குள் பெற்று விடவேண்டும்! ஆ. சிவக்குமார், நடுவீரப்பட்டு, கடலுார்: மேம்பால ஊழலில் கைது செய்யப்பட்ட கருணாநிதியை விட, இதுவரை ஊழலில் கைது செய்யப்படாத ஸ்டாலின் யோக்கியர்தானே?விஞ்ஞான ரீதியாக, ஊழல் செய்ய சொல்லிக் கொடுக்க தெரியாத அரசு அதிகாரிகள், அந்த காலத்தில் இருந்தது தான் கைதுக்குக் காரணம்... இப்போது உங்கள் கேள்விக்கு பதில் தெரிந்திருக்குமே!ஆர். கோபால், வேலுார்: எனக்கு, பொறுமை இல்லாமல் இருக்கிறதே...மகிழ்ச்சி எப்போதுமே நம்மை அடையாது! வாழ்க்கை என்றால், ஏற்ற தாழ்வுகள் மற்றும் ஏமாற்றங்கள் வரத்தான் செய்யும்... ஏளனப் பேச்சுகளும் வரும்! அவற்றை, பொறுமை எனும் ஆயுதம் கொண்டு தான் விரட்ட வேண்டும்! தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !